வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (14/09/2018)

கடைசி தொடர்பு:16:50 (14/09/2018)

`எந்த போஸ்ட்டும் போடல; ரீட்வீட்தான் செய்தேன்!’ - தேனப்பனை ஆறுதல்படுத்திய சந்தோஷ் சிவன்

பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், ட்விட்டரில் மீம்ஸ் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், தயாரிப்பாளர்கள், படத்தில் வேலைபார்த்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு சம்பளம் வழங்கும்போது கோபமாக இருப்பதாகவும், அதே நேரத்தில் படத்தில் நடித்த நடிகைகளுக்கு சம்பளம் கொடுக்கும்போது சிரித்த முகத்துடன் இருப்பதாகவும் இருந்தது இந்த மீம்ஸ்.

 சந்தோஷ் சிவன்


இப்படிப்பட்ட சர்ச்சையான கருத்தை தெரிவித்திருந்த இந்த மீம்ஸை பார்த்த தயாரிப்பாளர்கள் பலரும் கோபம் அடைந்தனர். மேலும், தயாரிப்பாளர் தேனப்பன் மிகவும் கோபப்பட்டதாகத் தகவல் கேள்விப்பட்டு, இதுகுறித்து தேனப்பனிடம் பேசினேம்.

''எனக்கு இப்படியொரு மீம்ஸை பார்த்தவுடன் மிகவும் கோபம் வந்தது. ஏனென்றால், திரையில் பி.சி.ஸ்ரீராம்க்குப் பிறகு, வியந்து ரசிக்கும் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். அவர் இப்படியொரு மீம்ஸை வெளியிட்டாரா என்று ஆதங்கப்பட்டேன். அவர், அதிகமாக மணிரத்னம் படங்களில் வேலை பார்த்திருக்கார். தவிர லிங்குசாமி, ஏ.ஆர்.முருகதாஸ் படங்களில் வேலை பார்த்திருக்கிறார். தெலுங்கு, இந்தி படங்களிலும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். எந்த மொழியைச் சேர்ந்த தயாரிப்பாளரை குறிப்பிடுகிறார் என்ற சந்தேகம் இருந்தது. யாரைச் சொல்லியிருந்தாலும் தயாரிப்பாளரை சொல்லி இருக்கிறாரே என்று எண்ணி வருத்தப்பட்டேன். இதைப் பற்றி மற்றவர்களிடம் கேட்பதைவிட சந்தோஷ் சிவனிடமே கேட்டுவிடலாம் என்று அவரிடம் பேசினேன். 

பி.எல்.தேனப்பன்


''நான் எந்தப் போஸ்டையும் போடவில்லை. ரீ ட்வீட் மட்டுமே செய்தேன். என்னவென்று தெரியவில்லை. நிறைய நண்பர்கள் போன் செய்தார்கள். உடனே நீக்கிவிடுகிறேன்''னு சொன்னார். அவருடைய பதில் என்னை ஆறுதல் படுத்தியது. கடைசியில் ஸ்ரீலீக் மாதிரி ஏதோ ஒன்று ஆகிவிட்டது என்று நினைக்கிறேன்'' என்று சொல்லி சிரித்துகொண்டே முடித்தார் தயாரிப்பாளர் தேனப்பன். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க