'சீமராஜா' சீக்ரெட்ஸ் - நள்ளிரவில் கண் கலங்கிய சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன்

`வருத்தப்படாத வாலிபர் சங்கம்', `ரஜினி முருகன்' என இரு ஹிட் படங்களைக் கொடுத்த பொன்ராம் - சிவகார்த்திகேயன் காம்போ மூன்றாவது முறையாக இணைந்த படம் தான் `சீமராஜா'. இமான் இசையில் ஆர்.டி.ராஜா தயாரித்த இப்படத்தில் சமந்தாவுடன் முதல்முறையாக ஜோடி சேர்ந்தார் சிவகார்த்திகேயன். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தயாராகி வந்த `சீமராஜா' படம் நேற்று வெளியானது. கலவையான விமர்சனங்களுடன் ரசிகர்கள் மத்தியில் இப்படம் வரவேற்பு பெற்றுவருகிறது. முன்னதாக நேற்று சில இடங்களில் `சீமராஜா' படத்தின் காலை 5 மணி காட்சிகள் வெளியாகாமல் தடைப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் சில மணி நேரங்களில் படம் வெளியாகாத தியேட்டர்களில் மீண்டும் திரையிடப்பட்டது. 

படம் வெளியாவதில் சிக்கல் இருந்தது எனத் தமிழ் சினிமா வட்டாரத்தில் பேச்சு எழுந்தது. இதுகுறித்து விசாரித்ததில், ``படத்தின் தயாரிப்பாளரான ஆர்.டி.ராஜா, ஜஸ்வந்த் பண்டாரி என்பவரிடம் ரூ.13 கோடி பைனான்ஸ் வாங்கியுள்ளார். ஆனால் அந்தப் பணத்தை செட்டில் செய்யவில்லை. அதனால் 'சீமராஜா' படத்துக்குத் தடை போடுங்கள்' என்று ரிலீஸுக்கு முந்தைய நாள் இரவு ஜஸ்வந்த் பண்டாரி நெருக்கடி கொடுக்கவே, சில இடங்களில் படம் வெளியாவதில் தடை ஏற்பட்டுள்ளது. விஷயம் அறிந்த சிவகார்த்திகேயன், ஜஸ்வந்த் பண்டாரியை தொடர்புகொண்டு ``உங்கள் பணத்தை நான் தருகிறேன். படத்தை ரிலீஸ் செய்ய விடுங்கள்" எனக் கூறவே, கடைசியாக ஜஸ்வந்த் பண்டாரி புகாரைத் திரும்பப் பெற்றார். அதன் பிறகே 'சீமராஜா' ரிலீஸ் ஆனது. தக்கச் சமயத்தில் ஆர்.டி.ராஜாவுக்கு சிவகார்த்திகேயன் உதவிய விஷயம் திரையுலகில் அவர் மீதுள்ள நன்மதிப்பை அதிகரித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!