வெளியிடப்பட்ட நேரம்: 18:46 (15/09/2018)

கடைசி தொடர்பு:18:51 (15/09/2018)

`நெக்ஸ்ட் கூர்கா..!' யோகி பாபுவின் நியூ லுக்

காமெடி நடிகர் யோகி பாபு லீடு ரோலில் நடிக்கும் `கூர்கா' படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

யோகி பாபு

தமிழ் சினிமாவில் தற்போது சூரிக்கு அடுத்து பெரும்பாலான படங்களில் காமெடியனாகத் தவறாமல் இடம்பெற்று வருகிறார் யோகி பாபு. விஜய், அஜித் படத்தில் நடித்து வரும் அதேவேளையில் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் போன்ற இளம் நடிகர்களின் படங்களிலும் இடம்பெற்றுவருகிறார். சமீபத்தில் வெளியான `கோலமாவு கோகிலா' படத்தில் இடம்பெற்ற `எனக்கிப்போ கல்யாண வயசுதான் வந்துடுச்சுடீ’ பாடல் இவரை மேலும் பிரபலப்படுத்தியது. இவர் ஹீரோவாக அவதாரம் எடுக்க இருக்கிறார் என சமீபத்தில் செய்திகள் வெளியாகின. டார்லிங், எனக்கு இன்னொரு பேரு இருக்கு ஆகிய படங்களை இயக்கிய சாம் ஆண்டன், இயக்கும் புதிய படத்தில் அவர் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் எனவும், காமெடியை மையமாக வைத்து கதை தயாராகியுள்ளது எனவும் செய்திகள் வெளியாகின. 

ஆனால், 'நான் அப்படி எந்தப் படத்திலும் ஹீரோவாக நடிக்கவில்லை. நான் கடைசி வரைக்கும் காமெடியனாதான் டிராவல் பண்ணுவேன். எனக்கு அதுதான் தகுதி. மக்களுக்கு அதுதான் பிடிச்சிருக்கு. சாம் ஆண்டன் படத்தில் லீடு ரோலில்தான் நடிக்கிறேன்' என யோகி பாபு விளக்கம் அளித்தார். இதற்கிடையே, யோகி பாபு லீடு ரோலில் நடிக்கும் படத்தின் தலைப்பு மற்றும் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. `கூர்கா' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சாம் ஆண்டன் இயக்கும் இப்படத்தில் யோகி பாபு கூர்கா வேடத்தில் நடிக்கிறார். நாயுடன் கூர்கா வேடத்தில் யோகி இருக்கும் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க