கோவில் விசிட், சிம்பிள் சாப்பாடு... செம ரிலாக்ஸ் நயன்தாரா!

நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் அமிர்தசரஸ் பொற்கோயிலில் எடுத்த படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.

விக்னேஷ்

நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலர்களாக பல இடங்களுக்கு சென்று வருகிறார்கள். விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாகவும் ஒரு பேச்சு இருக்கிறது. ஆனாலும் காதலுக்கு மத்தியில் இருவரும் பட வேளைகளில் பிஸியாகி இருந்துவந்தனர். தமிழ், தெலுங்கு,  மலையாளம் என முன்னணி நடிகர்களின் படங்களிலும் நயன்தாரா நடித்து வருகிறார். பிஸியான நேரங்களுக்கு மத்தியில் விடுமுறை கிடைத்தால் இருவரும் அடிக்கடி வெளியூர்களுக்கும் சென்றுவருவதுடன் அந்தப் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்தும் வந்தனர். இது வைரலாகியும் வந்தது. 

இந்நிலையில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் இன்று காலை பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குச் சென்றுள்ளனர். இந்தப் புகைப்படத்தை நயன்தாரா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் விக்னேஷ் சிவனு,ம் நயன்தராவும் தரையில் அமர்ந்து உணவு உண்ணும் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் என அடுத்தடுத்த ஹிட்களுக்கு பிறகு ரிலாக்ஸ் ட்ரிப்பில் இருக்கிறார் நயன்தாரா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!