வெளியிடப்பட்ட நேரம்: 13:34 (16/09/2018)

கடைசி தொடர்பு:13:34 (16/09/2018)

‘நம்ம நம்பிக்கைய அழிக்கவர்ற பயத்த நாம அழிக்கனும்’ - விறுவிறுப்பான ‘கொரில்லா’ டீசர்

ஜீவா நடிப்பில் டான் சாண்டி இயக்கத்தில் அக்‌ஷன், காமெடி எனக் கலக்கும் கொரில்லா படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

கொரில்லா

இயக்குநர் டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா, யோகிபாபு, சதீஷ், ராதாரவி ஆகியோர் நடிப்பில் தயாராகி வரும் ‘கொரில்லா’ படத்தின் டீசரை சூர்யா வெளியிட்டார். தாய்லாந்தைச் சேர்ந்த `காங்’என்ற சிம்பான்ஸி இந்த படத்தில் முக்கியக் கதாப்பாத்தில் நடித்துள்ளது. தெலுங்கில் ஹிட்டான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் நடித்த ஷாலினி பாண்டே ஜீவாவுக்கு ஜோடியாக இந்த படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். விக்ரம் வேதா, மேயாத மான் படங்களில் நடித்த விவேக் பிரசன்னா, `நான் கடவுள்' ராஜேந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர். சாம் சி.எஸ். இசையமைக்க, ஆர்.பி. குருதேவ் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பு செய்கிறார். 

ஹாலிவுட் படங்களைப் பார்த்து, சிம்பான்ஸியின் உதவியுடன் ஜீவா மற்றும் அவரது நண்பர்கள் எப்படி வங்கியைக் கொள்ளையடிக்கிறார்கள், ஏன் இதைச் செய்கிறார்கள் என முழு நீள காமெடிப் படமாகத் தயாராகியுள்ளது ‘கொரில்லா’. ராஜுமுருகன் இயக்கத்தில் ‘ஜிப்ஸி’ படத்தில் நடித்து வரும் ஜீவா, இப்படத்தில் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார் என எதிர்பார்க்கலாம். அக்‌ஷன், காமெடி என நீளும் டீசரின் இறுதியில் யோகிபாபுவுக்கு காங் தரும் முத்தம் ஹைலைட்.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க