`என் நம்பிக்கைய புரட்டி போட்ட அந்த கேஸ்!'' - வெளியானது துப்பாக்கி முனை டீசர்

விக்ரம் பிரபு நடிக்கும் ``துப்பாக்கி முனை'' படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. படத்தில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக வருகிறார் விக்ரம் பிரபு.

விக்ரம் பிரபு

'நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல' படத்தை இயக்கியவர் தினேஷ் செல்வராஜ். இவரின் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படம் `துப்பாக்கி முனை'. இந்தப் படத்தில், விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். 60 வயது மாநிறம் படத்தைத் தொடர்ந்து கலைப்புலி  தாணு தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, எல்.வி முத்துகணேஷ் இசையமைக்கிறார். ராமசாமி படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் டீசர், இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது. டீசரில் கம்பீரமான போலீஸ் அதிகாரியாகவும், என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக வலம் வருகிறார் விக்ரம் பிரபு. போலீஸ் அதிகாரி வரும் விக்ரம் பிரபு தன் வாழ்க்கையை மாற்றிய கேஸ் குறித்து விசாரிக்கும் வகையில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சத்தமும், தோட்டாக்களும் ஸ்கீரின் முழுவதையும் ஆக்கிரமித்துள்ளன.  வேல.ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். விக்ரம் பிரபுவுடன் ஹன்சிகா நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் டீசரை, விக்ரம் பிரபு ரசிகர்கள், சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

 

 

 

 

 


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!