வெளியிடப்பட்ட நேரம்: 12:48 (20/09/2018)

கடைசி தொடர்பு:12:48 (20/09/2018)

தென்காசியில் 'உறியடி 2' படப்பிடிப்பு! மோசன் போஸ்டரை வெளியிட்டார் நடிகர் சூர்யா

கடந்த 2016-ம் ஆண்டு அறிமுக இயக்குநர் விஜயகுமார் இயக்கி நடித்த படம் 'உறியடி'. அந்தப் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், அவரின் அடுத்த படமும் 'உறியடி' படத்தின் இரண்டாம் பாகமான 'உறியடி 2' படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் நடிகர் சூர்யா தயாரிக்க, இணைத் தயாரிப்பாளராக இப்படத்தின் இயக்குநர் விஜயகுமாரும் இணைந்துள்ளார்.

உறியடி 2

இதில் விஜயகுமாருக்கு ஜோடியாக அறிமுக நாயகி விஸ்மயா நடிக்கிறார். 'மெட்ராஸ் சென்ட்ரல்' சுதாகர், 'உறியடி' ஷங்கர்தாஸ் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். '96' படத்தின் தன் இசையால் அனைவரையும் கவர்ந்த கோவிந்த் வசந்தா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். மக்களுக்குத் தேவையான சோஷியல் மெசேஜுடன் உருவாகவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து, இப்படத்தின் மோசன் போஸ்டரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க