வெளியிடப்பட்ட நேரம்: 13:59 (24/09/2018)

கடைசி தொடர்பு:13:59 (24/09/2018)

வைரலாகும் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் நடித்த குறும்படம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய்யின் மகன் சஞ்சய், முதன்முதலாக ஒரு குறும்படத்தில் நடித்துள்ளார். 

சஞ்சய்

PhotoCredits : twitter/@RajasekaranCine

தமிழ் சினிமா திரையுலகில் தவிர்க்க முடியாதவராகவும், முன்னணி கதாநாயகனாகவும் திகழ்பவர் நடிகர் விஜய். இவருக்கு சஞ்சய் மற்றும் ஷாஷா என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். விஜய்யின் மகனான சஞ்சய் 2009-ல் விஜய் நடித்த `வேட்டைக்காரன்' படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் சிறு நடனமாடி அனைவர் மனதிலும் இடம்பிடித்தார். ஃபிலிம் மேக்கிங் படித்த சஞ்சய், கடந்த வருடம் தன் படிப்பை முடித்தார். 

இந்நிலையில், விஜய்யின் மகன் சஞ்சய் தற்போது ஒரு முழு நீள குறும்படத்தில் நடித்துள்ளார். ‘ஜங்ஷன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் 11 விநாடிகள் கொண்ட டீசர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. ஜங்ஷன் படத்தை சஞ்சய் தான் இயக்கியுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதை விஜய்யின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பிரபலமாக்கிவருகின்றனர். 

நடிகர் விஜய்க்கு நேற்று சர்வதேச சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டது, இதையடுத்து, அவரது மகன் நடித்துள்ள படத்தின் டீசர் வெளியாகியுள்ளதால், விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இவற்றைத் தொடர்ந்து, இன்று 'சர்கார்' படத்தின் சிங்கிள் ட்ராக் பாடலும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.