Published:Updated:

சுயசரிதை படமாகிறது! - கருணாநிதி வேடத்தில் நடிக்கிறார் பிரகாஷ்ராஜ்

எம்.குணா
சுயசரிதை படமாகிறது! - கருணாநிதி வேடத்தில் நடிக்கிறார் பிரகாஷ்ராஜ்
சுயசரிதை படமாகிறது! - கருணாநிதி வேடத்தில் நடிக்கிறார் பிரகாஷ்ராஜ்

கருணாநிதியின் சுயசரிதையைத் திரைப்படமாக்கும் முயற்சியில் பிரபலமான தயாரிப்பாளர்கள் சிலர் இறங்கியுள்ளனர். கருணாநிதி வேடத்தில் நடிகர் பிரகாஷ்ராஜை நடிக்கவைக்கப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 

எம்.ஜி.ஆரை கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தோடு திரைப்படமாக்கி வருகிறார் டைரக்டர் பி.வாசு. இன்னொருபக்கம் ஜெயலலிதாவின் பயோக்ரபியை திரைப்படமாக்கும் முயற்சியில் ஏ.எல்.விஜய் இறங்கி இருக்கிறார். ஜெயலலிதா வேடத்தில் நடிப்பதற்காக பாலிவுட் பிரபலம் வித்யாபாலனிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். பாரதிராஜாவும் அனுஷ்காவிடம் பேசிக்கொண்டு இருப்பதாகச் சொல்கிறார்கள். கருணாநிதியின் சுயசரிதையை திரைப்படமாக்கும் முயற்சியில் பிரபலமான தயாரிப்பாளர்கள் சிலபேர் இறங்கி இருக்கின்றனர்.

ஏற்கெனவே 'நான் கருணாநிதி வேடத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன்' என்று தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார் பிரகாஷ்ராஜ். கடந்த காலத்தில் எம்.ஜி.ஆர், கருணாநிதியை மையமாக வைத்து 'இருவர்' படத்தை இயக்கினார் மணிரத்னம். அப்போது நடந்த தமிழக அரசு திரைப்பட விழாவில் கலந்துகொண்ட முதல்வர் கருணாநிதி 'இருவர்' படத்தில் கருணாநிதி வேடத்தில் நடித்ததற்காக பிரகாஷ்ராஜுக்கு விருது வழங்கியபோது  அரங்கமே அதிர்ந்தது. 1967-ம் ஆண்டுமுதல் இன்றுவரை தமிழகத்தின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தி கருணாநிதி. இப்போது உருவாக  உள்ள கருணாநிதி சுயசரிதை திரைப்படத்தை விரைவில் துவங்கும் வேலையை ரகசியமாக செய்து வருகின்றனர். கருணாநிதி வேடத்தில் நடிப்பதற்காக பிரகாஷ்ராஜிடம் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது.