`சாய்னா நேவால்’ பயோபிக் -கோபிசந்திடம் பயிற்சி பெறும் ஷ்ரத்தா கபூர்! | Shraddha Kapoor starring at Saina Nehwal's biopic

வெளியிடப்பட்ட நேரம்: 22:11 (24/09/2018)

கடைசி தொடர்பு:22:11 (24/09/2018)

`சாய்னா நேவால்’ பயோபிக் -கோபிசந்திடம் பயிற்சி பெறும் ஷ்ரத்தா கபூர்!

பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. இதில், ஷ்ரத்தா கபூர் சாய்னாவாக நடிக்கவுள்ளார்.

ஷ்ரத்தா கபூர்

photo credit : @TSeries

பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால். இந்திய பேட்மின்டன் வரலாற்றில் புதிய பரிணாமத்தை உருவாக்கியவர். இவரின் வரவுக்குப் பின்பு இந்தியாவில் பேட்மின்டன் விளையாட்டு கூடுதல் கவனம் பெற்றது. ஒலிம்பிக், காமன்வெல்த், ஆசிய விளையாட்டு, சீன ஓப்பன் என பேட்மின்டன் விளையாட்டில் தனது முத்திரையைப் பதித்துள்ளார் சாய்னா. இவரின் வாழ்க்கை வரலாறு தற்போது திரைப்படமாக உருவாகவுள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமான டி-சீரீஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு `சாய்னா' என்றே பெயரிடப்பட்டுள்ளது. சாய்னா நேவாலாக பிரபல இந்தி நடிகை ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார். அமோல் குப்தே என்பவர் இப்படத்தை இயக்குகிறார். 

பிரபாஸின் சகோ படத்தில் தன் போர்ஷனை நடித்து முடித்துவிட்ட ஷ்ரத்தா இப்போது சாய்னா படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்துக்கான ஷூட்டிங் மும்பையில் தொடங்கியுள்ளது. சாய்னா கேரக்டரில் நடிக்கவுள்ளதற்காக முன்னாள் பேட்மின்டன் பிளேயர் கோபிசந்திடம் ஷ்ரத்தா பேட்மின்டன் டிரெயினிங் எடுத்து வருகிறார். பயோபிக் படங்கள் ஹிட் அடித்து வரும் இக்காலகட்டத்தில் சாய்னா நேவால் பயோபிக்கும் தயாராகவுள்ளது அவரின் ரசிகர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க