`சினிமாவில் என்னை கைடு பண்றதுக்கு யாருமே கிடையாது!’ - `தரமணி’ வசந்த் ரவி உருக்கம் | Actor vasanth ravi says about his next project

வெளியிடப்பட்ட நேரம்: 15:39 (25/09/2018)

கடைசி தொடர்பு:16:08 (25/09/2018)

`சினிமாவில் என்னை கைடு பண்றதுக்கு யாருமே கிடையாது!’ - `தரமணி’ வசந்த் ரவி உருக்கம்

``சினிமாவில் என்னை கைடு பண்றதுக்கோ நல்லது கெட்டது சொல்லிக் கொடுப்பதற்கோ யாருமே கிடையாது. ஆனால், சினிமாவை நோக்கி ஓடணும். அதுதான் வாழ்க்கை அப்படிங்கிற முடிவுல உறுதியா இருக்கேன்'' என்று நம்பிக்கையுடன் பேசுகிறார் 'தரமணி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகர் வசந்த் ரவி. 

வசந்த் ரவி

அவரிடம் நான் பேசினேன். `` `தரமணி' படத்துக்குப் பிறகு நிறைய படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. முக்கியமா, த்ரில்லர் ஜானர், காதல் படங்களில் நடிக்கக் கேட்டாங்க. எந்த மாதிரியான ஜானரில் நடிக்கலாம்னு யோசிச்சு இருந்தேன். அப்போதான் ஆக்‌ஷன் ஜானரில் ஸ்க்ரிப்ட் ஒண்ணு வந்தது. எனக்கு இதை ஆச்சர்யத்தைதான் கொடுத்தது. ஏன்னா, ரெண்டாவது படத்துல நடிக்கிற ஒரு ஹீரோவுக்கு டைரக்டர் ஆக்‌ஷன் ஸ்க்ரிப்ட் சொல்ல கொஞ்சம் யோசிப்பாங்க. ஸ்க்ரிப்ட் கேட்டவுடன் இந்தக் கதையில நடிக்கணும்னு விட்டுற கூடாதுனு தோணுச்சு. 

படத்தோட இயக்குநர் அருணுக்கு முதல் படம் இது. ரொம்பத் திறமைசாலி. `இறுதிச் சுற்று' படத்துல வசனகர்த்தாவா வொர்க் பண்ணியிருக்கார். இதுதவிர, தியாகராஜன் குமாராஜாவோட உதவி இயக்குநர். படத்தோட ஷூட்டிங் 50 சதவிகிதம் முடிஞ்சிருக்கு. சென்னையில நடக்கிற கதைக்களம். படத்துல முக்கியமான ரோலில் ரவீனாரவி, ரோகிணி நடிக்கிறாங்க. இதுதவிர, பிரபலமான  நடிகர் ஒருவர் முக்கியமான ரோலில் நடிக்கிறார். அவரைப் பத்தி இப்போ சொல்ல முடியாது. அதிகாரபூர்வமான அறிவிப்பு வரும். படத்துல இசைக்கு முக்கியத்துவம் இருக்கும். டர்புக்கா சிவா அதுக்காக வொர்க் பண்றார். படத்தோட ஃபர்ஸ்ட் லுக் படம் எதைப் பற்றிப் பேசும்னு சொல்லும். ரொம்ப ஸ்டைல்லா இருக்கும்.

ரொம்ப சந்தோஷமா இருக்கு. `தரமணி' படத்துக்குப் பிறகு மிஷ்கின் சார் என்கிட்ட பேசினார். `நம்ம ஒரு படம் கண்டிப்பா பண்ணணும்'னு சொன்னார். அவர் படத்துல நடிக்க நானும் ஆர்வமா இருக்கேன்’னு சந்தோஷமா சொல்லி முடித்தார் வசந்த் ரவி. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க