வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (27/09/2018)

கடைசி தொடர்பு:15:03 (27/09/2018)

`உள்ளுக்குள்ள பயங்கர தில்லு, வெளிலதான் கொஞ்சம் டல்லு' - தமிழில் கலக்கும் அமீர், அமிதாப் படத்தின் டிரெய்லர்! #ThugsOfHindustan

பாலிவுட் நடிகர் அமீர் கான் நடிப்பில் உருவாகியுள்ள `தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்' படத்தின் டிரெய்லர் ரிலீஸாகியுள்ளது.

தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அடுத்து நடிக்கும் படம்தான் `தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்'. இந்திய சினிமாவின் ஐக்கானாக விளங்கும் அமிதாப் பச்சனும் அமீருடன் இணைந்து இந்தப் படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார். பாலிவுட்டில் மல்டி ஸ்டாரர் படங்களை இயக்குவதில் கில்லாடியான விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா, இப்படத்தை இயக்கியுள்ளார். கத்ரீனா கைஃப் நாயகியாகவும், 'டங்கல்' படத்தில் அமீர் கானின் மகளாக நடித்த பாத்திமா சனா முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். அஜய் - அதுல் இருவரும் இசையமைத்துள்ளனர். `டங்கல்', `சீக்ரெட் சூப்பர் ஸ்டார்' எனத் தொடர் வெற்றிப் படங்களால் உலக சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவருகிறார் அமீர் கான்

இதனால் `தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்' படத்துக்கு இப்ந்திருந்தே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தும் விதமாக, சமீபத்தில் அமிதாப்பும் அமீரும் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்கள். அது, தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படம் ரிலீஸாகிறது என அவர்கள் இருவரும் தங்களது குரலிலேயே பேசி சர்ப்ரைஸ் கொடுத்தனர். சுதந்திரப் போராட்ட கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ஏற்கெனவே வெளியான நிலையில், இன்று படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. பிரமாண்ட காட்சி அமைப்புகள், வசனங்கள், இசை அமீர் கான் படம் என்பதை டிரெய்லர் உறுதிப்படுத்துகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க