`அட்மின் பேசுனாருனு சொல்றதுதான் இப்போ ட்ரெண்ட்' - அரசியல்வாதிகளைக் கலாய்த்த விஜய் சேதுபதி! | actor vijay sethupathi slams politicians

வெளியிடப்பட்ட நேரம்: 18:21 (29/09/2018)

கடைசி தொடர்பு:18:21 (29/09/2018)

`அட்மின் பேசுனாருனு சொல்றதுதான் இப்போ ட்ரெண்ட்' - அரசியல்வாதிகளைக் கலாய்த்த விஜய் சேதுபதி!

``எல்லாம் பேசிவிட்டு அட்மின் மீது பழி போடுவதுதான் இப்போதைய ட்ரெண்ட்'' என அரசியல்வாதிகளை மறைமுகமாக விமர்சித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதி

`96 படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு `பேட்ட' படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. லக்னோவில் `பேட்ட' படத்துக்காக ரஜினிகாந்துடன் நடித்து வந்தவர், `96 படத்தின் புரொமோஷனுக்காக நேற்று சென்னை வந்தார். இன்று சென்னையில் நடந்தவிழாவில் புரொமோஷன் கலந்துகொண்ட அவர் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார். சபரிமலைக்குப் பெண்கள் அனுமதிக்கப்பட்டதை வரவேற்ற அவர், நேற்று  ரெய்டு நடந்ததாக எழுந்த வதந்தி குறித்தும் பேசினார். அதில், ``நான் 3 வருஷமா அட்வான்ஸாக வரி கட்டிட்டு வர்றேன். இது என்னுடைய ஆடிட்டரால் வந்த குழப்பம். வந்தவர்கள் ஆய்வு செய்துவிட்டு குழப்பம் தீர்ந்ததாக சொல்லிவிட்டனர். என் வீட்டுல நடந்தது சர்வேதான்னு வந்த அதிகாரிகள் சொன்னாங்க. 

அது ரெய்டு என்று செய்திகள் வந்தன. ஒரு விஷயம் தவறாகச் சொன்னால்தான் வேகமாகப் பரவும். நல்லதுதான் இதனால பப்ளிசிட்டிதான் கிடைக்கும். சமீபகாலமா பொது வெளிகளில் கண்டபடி பேசுவதுதான் பப்ளிசிட்டினு ஆகிடுச்சி. இப்படி பொதுவெளியில் கத்தி பேசிவிட்டு ‘நான் பேசல அட்மின் பேசுனாரு, இல்ல மிமிக்ரி பண்ணாங்க’னு சொல்லுவாங்க. அதுதான் இப்போ ட்ரெண்டா இருக்கு. அது மாதிரி அது ஏன் வீடே இல்ல, ஏன் வீடு மாதிரி செட் போட்டு ரெய்டு பண்ணாங்க. அவ்வளவுதான்" என்று பேசினார்.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க