வெளியிடப்பட்ட நேரம்: 12:35 (04/10/2018)

கடைசி தொடர்பு:12:35 (04/10/2018)

``நோட்டா படத்துல நல்லா நடிக்கிறதுக்கான வாய்ப்பை இழந்துட்டேன்" - யாஷிகா அப்செட்

கிட்டத்தட்ட 99 நாள்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்த யாஷிகா நடித்து வெளியாகவிருக்கும் படம் 'நோட்டா'. இதில் விஜய் தேவரகொண்டா மற்றும் மெஹரீன் பிர்ஸாடா முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்ததால், யாஷிகா நடிக்க வேண்டிய கதாபாத்திரம், சிறிய கேமியோ ரோலாக மாற்றப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியானது. 

யாஷிகா

இதுகுறித்து யாஷிகாவிடம் கேட்டபோது, ``பிக் பாஸ் வீட்ல  இருந்து வெளிய வந்தவுடனேயே நிறைய சினிமா வாய்ப்புகள் வந்துச்சு. ஆனா, நான் அவசரப்பட்டு எந்தவொரு படத்துலயும் கமிட்டாகக் கூடாதுனு பொறுமையா கதைகள் மட்டும் கேட்டுக்கிட்டு இருக்கேன். விஜய் தேவரகொண்டா நடிக்கிற 'நோட்டா' படத்துல நான் பிக் பாஸுக்கு முன்னாடியே கமிட்டாயிட்டேன். இதுல என்னோட கதாபாத்திரம் அரை மணி நேரம் திரையில வந்துபோகுற மாதிரியான கதாபாத்திரம். ஆனா, நான் பிக் பாஸ்ல இருந்ததுனால ஷூட்டிங்குக்குப் போக முடியலை. அதனால என்னோட கதாபாத்திரத்தை சின்ன கேமியோ ரோலா மாத்திட்டாங்க. அரசியல் மூலமா நம்ம நாட்டுக்கு என்ன தேவையோ, அதைச் செய்யணும், அது இல்லாம அதை பணம் சம்பாதிக்கிறதுக்கான ஒரு வியாபாரமா மாத்திட்டாங்க. இப்போ இருக்கும் அரசியல்வாதிகள். இதையெல்லாம் எடுத்துச் சொல்ற மாதிரியான ஒரு கதாபாத்திரம்தான் என்னோடது" என்று கூறினார்.