வெளியிடப்பட்ட நேரம்: 19:15 (04/10/2018)

கடைசி தொடர்பு:19:22 (04/10/2018)

`கிடா மீசை; கிராமத்து லுக்!’ - `வாவ்’ ரஜினி #PettaSecondLook

`காலா' படத்துக்குப் பிறகு ரஜினி நடிக்கும் திரைப்படம் `பேட்ட.' கார்த்திக் சுப்புராஜ் இயக்கிக்கொண்டிருக்கும் இந்தப் படம் பெரிய எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. மேலும், இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன், த்ரிஷா என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இவர்கள் இருவரும் ரஜினியுடன் நடிக்கும் முதல் படம் இதுதான். 

 

பேட்ட

படத்தில் ரஜினியுடன் நவாசுதின், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா உள்ளிட்டோரும் நடித்துக்கொண்டிருக்கிறார்கள். '96 படத்தின் புரொமோஷனுக்கு 'பேட்ட' படத்துக்கு பிரேக் விட்டு விஜய் சேதுபதி சென்னை வந்திருக்கிறார். இதற்கிடையில் நடிகர் சசிகுமார் இந்தப் படத்தில் ரஜினியுடன் நடிக்க ஒப்பந்தமாகி நடித்துக்கொண்டிருக்கிறார். ஃப்ளாஷ் பேக் காட்சிகளில் சசிகுமார் போர்ஷன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், 'பேட்ட' படத்தின் செகண்டு லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், கிடா மீசையுடன் ரஜினி, வெள்ளை வேட்டி சட்டையில் கம்பீரமாகக் கிராமத்து லுக்கில் இருக்கிறார். இந்தப் படம் தற்போது இணையத்தில் வைரலாகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க