வெளியிடப்பட்ட நேரம்: 08:20 (05/10/2018)

கடைசி தொடர்பு:08:27 (05/10/2018)

இரண்டு பாகமாக வெளியாகும் என்.டி.ஆர் பயோபிக்!

பயோபிக்

மறைந்த தெலுங்கு நடிகரும் முன்னாள் ஆந்திர முதல்வருமான என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாறு பயோபிக் படமாக்கப்பட்டுவருகிறது. இதை, தேஜா இயக்குகிறார். இதில், என்.டி.ஆரின் கதாபாத்திரத்தில் அவரின் மகன் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கிறார். இந்தப் படத்தில் அவரின் மனைவியாக வித்யா பாலன் நடிக்கின்றார். மேலும், சந்திரபாபு நாயுடுவாக ராணா, அவரின் மனைவியாக மஞ்சிமா மோகன், சாவித்ரியாக நித்யா மேனன் என பலர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றனர்.

பயோபிக்

முதலில் 'என்.டி.ஆர்' என பெயர் வைத்துள்ள இப்படத்தில் என்.டி.ராமாராவின் சினிமா, அரசியல் ஆகிய அனைத்தையும் படமாக எடுக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால், தற்போது அவர் வாழ்க்கையை சினிமா, அரசியல் என பிரித்து இரண்டு பாகமாக வெளியிட திட்டமிட்டுள்ளனர். சினிமா வாழ்க்கையை 'கதாநாயகுடு' என்றும் அரசியல் வாழ்க்கைக்கு 'மஹாநாயகுடு' என்றும் பெயரிட்டுள்ளனர். முதல் பாகத்தை ஜனவரி 9-ம் தேதியும் இரண்டாம் பாகத்தை ஜனவரி 24-ம் தேதியும் வெளியிட உள்ளது படக்குழு.

நீங்க எப்படி பீல் பண்றீங்க