வெளியிடப்பட்ட நேரம்: 08:40 (05/10/2018)

கடைசி தொடர்பு:08:44 (05/10/2018)

மலைப்பாம்புடன் காஜல் அகர்வால்..! வைரல் வீடியோ

'குயின்' படத்தின் தமிழ் ரீமேக்கான 'பாரிஸ் பாரிஸ்' படத்தில் நடித்து முடித்த காஜல் அகர்வால், இப்போது பெல்லம்கொண்டா ஶ்ரீனிவாஸுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் தேஜ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

காஜல் அகர்வால்

அப்போது உயிரியல் பூங்காவுக்குச் சென்ற காஜல் அகர்வால், மலைப்பாம்பை தன் கழுத்தில் சுற்றிக்கொண்டு இருக்கும் வீடியோவை 'என்ன ஒரு அனுபவம்?' என்ற கேப்ஷனோடு தன் சமூக வலைதளப்பக்கங்களில் பதிவிட்டுள்ளார். அதில், 'பாம்பை உன்னால் உணரமுடிகிறதா காஜல்?' என்று ஒரு நபர் கேட்க, 'நன்றாக உணர முடிகிறது. அதன் தசைகள் நகர்கிறது. மேலும் அதன் சத்தத்தையும் உணர்கிறேன்' என பதிலளித்துள்ளார். இந்த வீடியோவுக்கு இணையத்தில் செம ரெஸ்பான்ஸ்! ஒன்றரை மில்லியன் வியூஸ்களைத் தாண்டி சென்றுகொண்டிருக்கிறது.  

 

 

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க