வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (05/10/2018)

கடைசி தொடர்பு:18:30 (05/10/2018)

சென்னையில் வீடு, அடுத்தடுத்து மூன்று படம்... ஶ்ரீரெட்டி ஹேப்பி அண்ணாச்சி!

பட வாய்ப்புகள் தருவதாகச் சொல்லி தன்னை பலர் ஏமாற்றிவிட்டதாக டோலிவுட்டிலும் கோலிவுட்டிலும் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி. தற்போது, `ரெட்டி டைரி' எனும் தமிழ்ப் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். ஆந்திராவில் எனக்கான நீதி கிடைக்கவில்லை என்றும், தமிழ்நாடு எனக்கான வலியை வெளியே கொண்டுவந்திருக்கிறது என்றும் கூறியிருந்தார். எனவே, இனி சென்னையில் செட்டிலாகி அடுத்தடுத்து படங்களில் நடிக்க இருப்பதாகவும் கூறியிருந்தார்.

ஶ்ரீரெட்டி

இந்நிலையில், அவர் சென்னை வளசரவாக்கத்தில் வாடகைக்கு வீடு வாங்கி குடியேறிவிட்டார். அவர், தன் புதுவீட்டின் முன் பசுக்களோடு இருக்கும் போட்டோவை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், இது தொடர்பாக அவரிடம் பேசியபோது, "தெலங்கானாவைவிட சென்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. சென்னையில் உள்ள முக்கியமான கோயில்களுக்குச் சென்றுவிட்டேன். அடுத்த வாரம் காஞ்சிபுரம், கும்பகோணம் ஆகிய இடங்களில் உள்ள கோயில்களுக்குச் செல்ல இருக்கிறேன். சமீபத்தில், 'யு டர்ன்' படம் பார்க்கச் சென்றிருந்தபோது, நிறையப் பேர் என்னிடம் வந்து பேசினார்கள். பெண்களுக்கு நடக்கும் பிரச்னைகளை வெளிப்படையாகச் சொன்னதுகுறித்து வாழ்த்துகள் கூறினார்கள். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அடுத்து, மூன்று தமிழ்ப் படங்களில் கமிட்டாகியுள்ளேன். அதுகுறித்த அப்டேட் விரைவில் வெளியாகும்" என்று கூறினார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க