வெளியிடப்பட்ட நேரம்: 22:18 (05/10/2018)

கடைசி தொடர்பு:10:54 (06/10/2018)

`கலங்க வைத்துவிட்டீர்கள்’ - மாரி செல்வராஜை நெகிழ்ந்து பாராட்டிய சிவகுமார்

`பரியேறும் பெருமாள்’ படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜை பாராட்டி தனது ஓவியப் புத்தகத்தை சிவகுமார் பரிசளித்தார். 

மாரி செல்வராஜ்

பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான `பரியேறும் பெருமாள்' படம் வெளியாகி அனைத்துத் தரப்பிலும் பலத்த வரவேற்பைப் பெற்றுவருகிறது. பல்வேறு நடிகர்களும் எழுத்தாளர்களும் படத்தைப் பாராட்டிவருகின்றனர். சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன், மாரி செல்வராஜையும் இரஞ்சித்தையும் அழைத்துப் பாராட்டியிருந்தார். இந்தநிலையில், பரியேறும் பெருமாள் படத்தைப் பார்த்த நடிகர் சிவகுமார் இயக்குநர் மாரிசெல்வராஜை அழைத்துப் பாராட்டினார்.

அப்போது, `சமூகத்துக்கு அவசியமான படம் எடுத்திருக்கிறீர்கள், ஒவ்வொருவரும் மனசுக்குள்ளும் உட்கார்ந்து உரையாடலை நிகழ்த்திவிட்டீர்கள் வாழ்த்துகள். சில காட்சிகளில் கலங்க வைத்துவிட்டீர்கள்' என்று பாராட்டி அவர் வரைந்த ஓவியப் புத்தகத்தைப் பரிசாக அளித்தார் சிவகுமார். இதை மாரி செல்வராஜ், அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.