வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (06/10/2018)

கடைசி தொடர்பு:07:18 (06/10/2018)

லெட்சுமி அகர்வால் பயோபிக்கில் தீபிகா படுகோன்!

இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் 'பத்மாவத்' படத்தில் நடித்து முடித்ததைத் தொடர்ந்து, எந்த பாலிவுட் படத்திலும் கமிட்டாகாமல் இருந்த தீபிகா படுகோன், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லெட்சுமி அகர்வாலின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

தீபிகா படுகோன்

காதலை மறுத்த காரணத்துக்காக தன் பதினைந்து வயதில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட இவர், இப்போது 'சான்வ் ஃபவுன்டேஷன்' என்ற தனியார் தொண்டு நிறுவனம் துவங்கி ஆசிட் வீக்சுக்கு எதிராகவும் ஆசிட் வீச்சால் பாதிக்கட்டவர்களுக்கு பெரிதளவில் உதவி செய்தும் வருகிறார். அதற்காக அவர் சர்வதேச அளவில் விருதுகள் பெற்றுள்ளார். இவரின் இந்த பயோபிக்கை 'ராஸி' படத்தை இயக்கிய மேக்னா குல்சார்தான் இந்தப் படத்தையும் இயக்கவிருக்கிறார். இதை தீபிகாவே தயாரிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர,  'xxx' ஹாலிவுட் படத்தின் நான்காம் பாகத்தில் வின் டீசல், சீன் நடிகர் வாங் யுவான் ஆகியோருடன் நடிக்கவும் கமிட்டாகி இருக்கிறார்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க