'தேவ்' படக்குழுவினருடன் கேக் வெட்டிய ரகுல் ப்ரீத்சிங்! | rakul preet singh wrapped her portion in dev film

வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (06/10/2018)

கடைசி தொடர்பு:07:30 (06/10/2018)

'தேவ்' படக்குழுவினருடன் கேக் வெட்டிய ரகுல் ப்ரீத்சிங்!

அறிமுக இயக்குநர் ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத்சிங் நடித்து வரும் படம் 'தேவ்'. ஆக்‌ஷன் ப்ளஸ் ரொமான்ஸ் ஜானரில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், இமாசலபிரதேசம், ஐரோப்பா நாடுகள் என பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்தது.

ரகுல் ப்ரீத்சிங்

இமாசலபிரதேசம், குலு மனாலியில் வெள்ளம், நிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட படப்பிடிப்பு சில நாள்களுக்குப் பின், அதே இடத்தில் மீண்டும் தொடங்கியது. வரும் அக்டோபர் பத்தாம் தேதி படத்தின் நாயகி ரகுல் ப்ரீத் சிங்குக்கு பிறந்தநாள். ஆனால், ஏற்கெனவே அவருக்கான போர்ஷன்கள் நிறைவடைந்துவிட்ட நிலையில், முன்னரே கேக் வெட்டச்சொல்லி அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்தது படக்குழு. அதை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார், நடிகை ரகுல். மேலும், இப்படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். தவிர, பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர்.  

 

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க