வெளியிடப்பட்ட நேரம்: 10:31 (06/10/2018)

கடைசி தொடர்பு:10:31 (06/10/2018)

ஷாப்பிங் மாலில் மகளுடன் உணவருந்தும் விஜய்! வைரலாகும் புகைப்படம்

நடிகர் விஜய் தன் மகளுடன் வெளியூரில் ஷாப்பிங் மாலில் உணவு அருந்தும் புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஷாப்பிங் மாலில் மகளுடன் உணவருந்தும் விஜய்

இயக்குநர் முருகதாஸ்- விஜய் காம்போவில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே விரைவில் `சர்கார்' திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின், பாடல்வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விஜய்யின் பேச்சு, அனைத்து தரப்பினரின் கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில், `சர்கார்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து ஓய்வுக்காக விஜய் வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார்.

கனடா, ஒன்டாரியோ நகரில் உள்ள டொரண்டோ ஈடன் சென்டர் ஷாப்பிங் மாலில் நடிகர் விஜய், தன் மகளுடன் உணவருந்தும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மகள் திவ்யா ஷாஷாவுடன் அமர்ந்து, விஜய் உணவருந்திக் கொண்டிருப்பதுபோல அந்தப் புகைப்படங்கள் அமைந்துள்ளன. மேலும் விஜய் ரசிகர்கள் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் இந்தப் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.