வெளியிடப்பட்ட நேரம்: 17:29 (06/10/2018)

கடைசி தொடர்பு:17:31 (06/10/2018)

`நேரம் வரும்போது நடக்கும்!’ - `புதுப்பேட்டை 2’ குறித்து செல்வராகவன்

'புதுப்பேட்டை' படத்தின் இரண்டாம் பாகம் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்விக்கு, இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். 

செல்வராகவன்

`இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ் நடித்த படம் 'புதுப்பேட்டை'. இந்தப் படம் வெளியானபோது, பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. இதையடுத்து, சில வருடங்களுக்குப் பிறகு புதுப்பேட்டையை மக்கள் கொண்டாட ஆரம்பித்தனர். அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க வேண்டும் எனப் பலரும் விருப்பம் தெரிவித்துவருகின்றனர். ஏற்கெனவே, 'ஆயிரத்தில் ஒருவன்', படத்தின் இரண்டாம் பாகத்துக்குக் கதை யோசித்து வைத்திருப்பதாக செல்வராகவன் கூறியிருந்தார்.

ட்விட்டர்

இந்நிலையில், நடிகர் சந்தீப் கிஷண் ட்விட்டரில், ``மீண்டும் புதுப்பேட்டை படத்தைப் பார்க்கிறேன். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் பிரம்மிப்பு உண்டாகிறது” என்று பதிவிட்டிருந்தார். இதற்கு இயக்குநர்  நன்றி தெரிவித்துப் பதிவிட்ட செல்வராகவனிடம், ``புதுப்பேட்டை ஒரு மாஸ்டர் பீஸ் படம். இரண்டாம் பாகத்துக்காக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்றார். அதற்கு அவர், ``நேரம் வரும்போது நிச்சயம் உருவாகும்” என்று பதிலளித்துள்ளார். தற்போது, சூர்யா நடிப்பில் என்.ஜி.கே படத்தை செல்வராகவன் இயக்கிவருவது குறிப்பிடத்தக்கது.