Published:Updated:

கொல வெறிக் கவிஞரைக் கைது செய்!

கே.ராஜாதிருவேங்கடம்படம் : பொன். காசிராஜன்

கொல வெறிக் கவிஞரைக் கைது செய்!

கே.ராஜாதிருவேங்கடம்படம் : பொன். காசிராஜன்

Published:Updated:
##~##

ப்பதான் சாப்பிட உட்கார்ந்தேன். பதில் சொல்லிக்கிட்டே சாப்பிடுறேன்... கேளுங்க'' - தமிழக முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன்.

 ''மூணு நாளா வைரல் ஃபீவர். பெட் ரெஸ்ட்ல இருக்கேன். பொது அறிவை அப்டேட் பண்ணிக்கிறேனே?'' - கவிஞர் சுகிர்தராணி.

''ராத்திரி தூங்க ரொம்பவே லேட் ஆகிடுச்சி. இப்பதான் எழுந்தேன் (காலை 11 மணி!) கேளுங்க'' - 'கனாக் காணும் காலங்கள்’ ஹரிபிரியா.

''விகடன்ல நான் ரொம்ப ரசிச்சுப் படிக்கிற பகுதி இது. ரொம்பப் படபடப்பா இருக்கு. கேளுங்க'' - நிதி ஆலோசகர் நாகப்பன்.

''அமெரிக்காவில் இருந்து இதோ இப்பத்தான் சென்னைக்கு வந்தேன். சிட்டியில் என்ன நடந்ததுன்னே தெரியலையே. பரவாயில்லை... கேளுங்க'' - நடிகை பிரியா ஆனந்த்.

கொல வெறிக் கவிஞரைக் கைது செய்!

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேய இன்ஜினீயர் யார்?

விடை: பென்னி குய்க்

ஜான் பாண்டியன்: ''அது அப்பவே காமராஜர் காலத்துக்கு முன்னாடியே அரசர்களால் கட்டப்பட்டது. கட்டுன ராஜா பேருதான் ஞாபகத்துல இல்லை!''

சுகிர்தராணி: ''ம்... பென்னி குய்க். இப்போ அதுதானே டாபிக்கல்!''

ஹரிபிரியா: ''வேற யாரு... பெரியார்தான் கட்டி இருப்பார்!''

நாகப்பன்: ''பென்னிதான். பாருங்க... எவ்வளவு பிரச்னை ஆயிடுச்சி இப்போ!''

பிரியா ஆனந்த்: ''மிஸ்டர் பென்னி குய்க்!''

ஆதார் அட்டை என்றால் என்ன?

விடை: மத்திய அரசால் ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் வழங்கப்படும் அடையாள அட்டை!

ஜான் பாண்டியன்: (உடனே ஆவேசமாகிறார்) ''பான் கார்டு, ரேஷன் கார்டு எல்லாம் இருக் கும்போது, இப்படி ஒரு கார்டு தேவையா என்பதை அரசாங்கம் யோசிக்க வேண்டும். வெளிநாட்டுக்காரங்க பலர் நம்ம நாட்ல இருக் காங்க. அவங்களுக்கு எப்படி ஆதார் கார்டு கொடுப்பீங்க? யோசிங்க!''

சுகிர்தராணி: ''அதுக்கு ஃபுல் ஃபார்ம் தெரியலை. ஆனா, மத்திய அரசு கொடுக்கும் அடையாள அட்டை அது!''

ஹரிபிரியா: ''அப்படின்னா என்னங்க? இவ்ளோ சீக்கிரமா எழுப்பிவிட்டுட்டு ஏன் என்னைக் கலாய்க்கிறீங்க? இன்னும் எனக்குத் தூக்கமே சரியாக் கலையலை!''

நாகப்பன்: ''இந்தியக் குடிமகனுக்கு அரசாங்கம் அளிக்கும் ஐ.டி. கார்டு!''

பிரியா ஆனந்த்: ''சென்ட்ரல் கவர்மென்ட் இஷ்யூ பண்ற கார்டு. நான்கூட வாங்கணும். எங்கே கொடுக்குறாங்க?''

13-ம் எண்ணுக்குப் பயப்படும் ஃபோபியா வுக்கு என்ன பெயர்?

விடை: Triskaidekaphobia

ஜான் பாண்டியன்: ''ஆமாங்க... நிறைய பேரு அதைப் பார்த்துப் பயப்படுறாங்க. ஆனா, எனக்கு பதிமூணைப் பார்த்து எந்தப் பயமும் இல்லை. அதனால, அதோட பேரையும் தெரிஞ்சுக்கலை!''

சுகிர்தராணி: ''நான் எதுக்கும் பயப்பட மாட்டேன். பேர் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. ஆனா, வாயில வர மாட்டேங்குது!''

ஹரிபிரியா: ''நம்பருக்குப் பயப்படுவாங்களா என்ன? என்ன கொடுமையான உலகமப்பா... சத்தியமா எனக்குத் தெரியாது!''

நாகப்பன்: ''நியூமரோஃபோபியாதானே!''

பிரியா ஆனந்த்: ''ஹிஸ்டாரிக்கல் ஃபோபியாவா? வெளிநாடுகள்ல அடிக்கடி சொல்வாங்களே?!''

கொல வெறிக் கவிஞரைக் கைது செய்!

ரத்தன் டாடாவுக்குப் பிறகு, டாடா குழுமத்தின் தலைவராகி இருப்பவர் யார்?

விடை: சைரஸ் மிஸ்ட்ரி

ஜான் பாண்டியன்: ''அது ஒரு நல்ல கம்பெனிங்க. இப்போ யார் அதுக்குத் தலைவராகி இருந்தாலும், அவங்களுக்கு என் வாழ்த்துக்கள்!''

சுகிர்தராணி: ''ஏதோ மில்ட்ரினு வரும். என்னங்க அது?''

ஹரிபிரியா: ''ஐயையோ! இதுக்கும் எனக்குப் பதில் தெரியாதே!''

நாகப்பன்: ''எத்தனையோ தடவை நானே சொல்லி இருக்கேன். ஆனா, நீங்க கேட்டதும் டக்குனு பதில் வர மாட்டேங்குது. ஒரு நிமிஷம் இருங்க... ம்ம்ம்.... ஆங்... சைரஸ் மிஸ்ட்ரி!''

பிரியா ஆனந்த்: ''சைரஸ் மிஸ்ரினு படிச்ச ஞாபகம்!''

'கொல வெறி’ பாடலுக்குக் கண்டனம் தெரிவித்த இந்திப் பாடலாசிரியர் யார்?

விடை: ஜாவேத் அக்தர்

ஜான் பாண்டியன்: ''எங்கள் கட்சியும் அந்தப் பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறது. மக்களைக் கொலை செய்யுமாறு தூண்டிய பாட்டு எழுதிய கவிஞரை 502/6 செக்ஷனில் கைது செய்ய தமிழக அரசு உத்தரவிட வேண்டும். சமூகம் சீரழிஞ்சுபோச்சுங்க!''

சுகிர்தராணி: ''ஜாவேத்... அவர்தான் கண்டனம் தெரிவிச்சதா ஃப்ரெண்ட்ஸ் சொன்னாங்க!''

ஹரிபிரியா: ''என்னது... கொலை வெறிப் பாட்டுக்குக் கண்டனமா? ஒரு நாளைக்குக் குறைஞ்சது இருபது தடவையாவது அந்தப் பாட்டை நான் கேட்பேன். செம பாட்டுங்க அது!''

நாகப்பன்: ''இந்தியில் எனக்குத் தெரிஞ்ச ஒரே பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் மட்டும்தான். ஆனா, கொல வெறிப் பாட்டுக்கு அவர் கண்டனம் தெரிவிச்சாரானு எனக்குத் தெரியலையே!''

பிரியா ஆனந்த்: ''யாரோ என்னமோ சொல்லிட் டுப் போறாங்க... வெரி குட் ஸாங். தனுஷ் சூப்பரா பாடி இருக்கார்!''

219 ரன்கள் குவித்து உலக சாதனை புரிந்த ஆட்டத்தில், சேவாக் எத்தனை சிக்ஸர் மற்றும் ஃபோர்கள் விளாசினார்?

விடை: சிக்ஸர்கள்-7, ஃபோர்கள்-25

ஜான் பாண்டியன்: ''பேப்பர்ல படிச்சேன். எனக்கு கிரிக்கெட்ல அவ்வளவா ஈடுபாடு கிடையாது. சச்சின் சாதனையை சேவாக் தம்பி முறியடிச்சிருக்காரு. என் தேசத்துத் தம்பி இந்தச் சாதனை படைச்சிருக்கார்னு பெருமையா இருக்கு!''  

கொல வெறிக் கவிஞரைக் கைது செய்!

சுகிர்தராணி: ''ரெஸ்ட்ல இருந்ததால, டி.வி-யில் மேட்ச் பார்த்தேன். அதனால, இந்தக் கேள்விக்கு எனக்குப் பதில் தெரியும். சிக்ஸ்ல ஏழு, ஃபோர்ல இருபத்தஞ்சு!''

ஹரிபிரியா: ''டபுள் செஞ்சுரி அடிச்சதா சொன்னாங்க. அப்படின்னா நிறைய சிக்ஸ்... நிறைய ஃபோர் அடிச்சிருக்கணும். கணக்குல நான் ரொம்ப வீக். என்னை விட்டுருங்க... நான் தூங்கணும்!''

நாகப்பன்: ''ஐயோ... கிரிக்கெட்டுக்கும் எனக் கும் ரொம்ப தூரம். ஆளை விடுங்க!''

பிரியா ஆனந்த்: ''சான்ஸே இல்லை... சேவாக் பின்னிட்டாரு! செவன் சிக்ஸர், ட்வென்ட்டி பைவ் ஃபோர் அடிச்சார்!''