வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (07/10/2018)

கடைசி தொடர்பு:07:30 (07/10/2018)

மூன்று வருடத்திற்கு பிறகு ரீ என்ட்ரி கொடுக்கும் பிபாஷா பாசு !

கடந்த மூன்று வருடங்களாக நடிப்பிற்கு இடைவெளி விட்டிருந்த பாலிவுட் நடிகை பிபாஷாபாசு, இப்போது ரீ என்ட்ரி கொடுக்கவிருக்கிறார். 2001 -ம் ஆண்டு சினிமாவுக்கு அறிமுகமான இவர், அமிதாப் பச்சன், சஞ்சய் தத் உள்ளிட்ட பெரிய நடிகர்களின் படத்தில் நடித்து தனக்கான இடத்தை பிடித்தார்.

பிபாஷா பாசு

2015 -ம் ஆண்டு 'அலோன்' என்ற படத்தில் கரண்சிங் க்ரோவருக்கு ஜோடியாக நடிக்கும்போது அவர்களுக்குள் காதல் ஏற்பட்டு திருமணம் செய்துகொண்டனர். அதன் பின், எந்தப் படத்திலும் நடிக்காமலே இருந்தார், பிபாஷாபாசு. இந்நிலையில், அதே அலோன் படத்தின் இயக்குநர் பூஷன் படேல் இயக்கவிருக்கும் 'ஆதத்' எனும் த்ரில்லர் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக அவரது கணவர் கரண்சிங் க்ரோவரே நடிக்கிறார். "நான் படத்தில் எவ்வளவு நேரம் வருகிறேன் என்பது எல்லாம் எனக்கு முக்கியமில்லை. திரையில் வரும் குறைந்த நேரமாக இருந்தாலும் என்னை நிரூபிக்கும் கதாபாத்திரமாக இருந்தால் எந்தப் படத்தில் வேண்டுமானாலும் நடிக்கத் தயார்" என்றும் கூறியுள்ளார்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க