வெளியிடப்பட்ட நேரம்: 18:55 (07/10/2018)

கடைசி தொடர்பு:18:55 (07/10/2018)

`பேட்ட’ படத்தில் இணையும் அடுத்த பிரபலம்!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'பேட்ட'  திரைப்படத்தில் ரஜினியோடு இணைந்து நடிகர் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சசிகுமார், திரிஷா, சிம்ரன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.  இதில், தற்போது இன்னொரு நடிகரும் இணைந்துள்ளார். இதைப் படக்குழு மிகவும் ரகசியமாக வைத்துள்ளது. 

பேட்ட படத்தில் இணையும் இயக்குநர் மகேந்திரன்

அவர் வேறுயாருமல்ல, ரஜினியை வைத்து முள்ளும் மலரும், ஜானி, கை கொடுக்கும் கை ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் மகேந்திரன்தான். ரஜினிக்கு மிகவும் பிடித்த இயக்குநர்களுள் இவரும் ஒருவர். இயக்குநர் மகேந்திரன், கன்னட இயக்குநர் ரவிவர்மா இயக்கத்தில் ரஸ்டம் என்னும் திரைப்படத்தில் நடித்து வந்தார். இதன் படப்பிடிப்பு கடந்து 5ம் தேதியோடு முடிந்தது. இதையடுத்து, நாளை முதல் 'பேட்ட' படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். இதை நடிகர் மகேந்திரனே அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த `தெறி’ படத்தில் வில்லனாக மகேந்திரன் மாஸ் காட்டியிருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிவரும் பேட்ட படத்தில் இயக்குநர் சசிக்குமார் நடிப்பது குறித்து தயாரிப்பு தரப்பில் சமீபத்தில் அறிவிப்பு வந்தது. அதேபோல், கிராமத்துப் பின்னணியில் கிடா மீசையுடன் ரஜினி இருப்பது போன்ற படத்தின் இரண்டாவது லுக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.