``வதந்திகளை பரப்பாதீர்கள்..!" - கடுப்பான `96' குட்டி த்ரிஷா கெளரி | 96 film fame gauri krishna says that we are not lovers

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (08/10/2018)

கடைசி தொடர்பு:17:30 (08/10/2018)

``வதந்திகளை பரப்பாதீர்கள்..!" - கடுப்பான `96' குட்டி த்ரிஷா கெளரி

`நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இயக்கியுள்ள படம் `96'. பள்ளிக் காதலை மிக நேர்த்தியாக சொல்லியிருந்த இந்தப் படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

96

அதில் விஜய் சேதுபதியின் பள்ளிப் பருவ கேரக்டரில் நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆதித்யாவும், பள்ளிப் பருவ த்ரிஷாவாக பெங்களூருவைச் சேர்ந்த கெளரி கிஷனும் நடித்துள்ளனர். இந்த ராம்-ஜானு ஜோடிதான் இணையத்தில் ஹாட் டாபிக்காக இருந்து வருகிறது. அவர்களின் நடிப்பும் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.

96

இந்த நிலையில், அவர்கள் இருவரும் உண்மையாகவே காதலர்கள் என செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. அதை மறுத்த கெளரி கிஷன், ``நாங்கள் இருவரும் காதலர்கள் இல்லை. ராம்-ஜானு எனும் காதல் ஜோடிகளின் கேரக்டரில் நடித்தோம் அவ்வளவுதான். உண்மையில், எங்களுக்குள் காதல் இல்லை. எங்களைப் பற்றி வரும் வதந்திகளைப் பரப்பாமல் இருங்கள்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதை ஆதித்யாவும் ரீ ட்வீட் செய்துள்ளார்.    

நீங்க எப்படி பீல் பண்றீங்க