வெளியிடப்பட்ட நேரம்: 17:54 (08/10/2018)

கடைசி தொடர்பு:19:49 (08/10/2018)

`சமந்தா, ரம்யா, காயத்ரியை விடுங்க... செம அழகி இவங்கதான்!' - #SuperDeluxe ஃபர்ஸ்ட் லுக்

தமிழ் சினிமாவில் `ஆரண்ய காண்டம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், பகவதி பெருமாள் (பக்ஸ்), காயத்ரி, விஜய் ராம் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளத்துடன் தயாராகியுள்ள 'சூப்பர் டீலக்ஸ்' படத்தை, தயாரித்து  இயக்குகிறார் தியாகராஜன் குமாரராஜா. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டது.  

சூப்பர் டீலக்ஸ்

ஆந்தாலஜியாக உருவாகும் இப்படத்தின் கூடுதல் திரைக்கதையை நலன் குமாரசாமி, மிஷ்கின், நீலன் கே.சேகர் (`அலிபாபா' படத்தின் இயக்குநர்) ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். யுவன் இசையமைக்கும் இப்படத்துக்கு நீரவ் ஷா மற்றும் பி.எஸ்.வினோத் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். படத்தில் நடித்திருக்கும் அத்தனை முக்கிய நடிகர்களையும் கொண்டதாக வெளியாகியுள்ள இந்தப் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.

'செக்கச் சிவந்த வானம்', ` `96' படங்களின் வெற்றிகளைத் தொடர்ந்து இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளி வந்துள்ளது சினிமா வட்டாரத்திலும் இப்படத்துக்கான வர்த்தகத்தைக் கூட்டும் என்று பேசப்பட்டுவருகிறது. சமந்தா, ரம்யா, காயத்ரி என நாயகிகள் இருந்தாலும் ஃபர்ஸ்ட் லுக்கில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது அந்த சிவப்புச் சேலை அழகிதான்!.