வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (08/10/2018)

கடைசி தொடர்பு:19:20 (08/10/2018)

`ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத் சிங்!' - என்.டி.ராமாராவ் பயோபிக் அப்டேட்

மறைந்த தெலுங்கு நடிகரும் முன்னாள் ஆந்திர முதல்வருமான என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாறு பயோபிக் படமாக்கப்பட்டு வருகிறது. இதை, தேஜா இயக்குகிறார். இதில், என்.டி.ஆரின் கதாபாத்திரத்தில் அவரின் மகன் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்க, அவரின் மனைவியாக வித்யா பாலன் நடிக்கிறார். மேலும், சந்திரபாபு நாயுடுவாக ராணா, அவரின் மனைவியாக மஞ்சிமா மோகன், சாவித்ரியாக நித்யா மேனன் எனப் பலர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றனர். 

ஶ்ரீதேவி

இதைத் தொடர்ந்து, ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத்சிங் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதைச் சவாலாக ஏற்ற ரகுல், ஸ்ரீதேவியின் உடல்மொழி, முக பாவனைகள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள அவர் நடித்த படங்களைப் பார்த்து வருகிறார். மேலும், அவருக்கு நெருக்கமானவர்களிடம் அவரைப் பற்றி முழுமையாகத் தெரிந்து வருகிறார். முதலில் சினிமா, அரசியல் என இரண்டையும் ஒரே படமாக எடுக்க திட்டமிட்ட படக்குழு இப்போது இரண்டு பாகமாக வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். சினிமா வாழ்க்கை அடங்கிய பாகத்துக்கு `கதாநாயகுடு' என்றும் அரசியல் வாழ்க்கையைச் சொல்லும் பகுதிக்கு 'மஹாநாயகுடு' என்றும் பெயரிட்டுள்ளனர். இரண்டுமே 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக இருக்கிறது.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க