வெளியிடப்பட்ட நேரம்: 19:21 (08/10/2018)

கடைசி தொடர்பு:19:21 (08/10/2018)

`` `96 என் முதல் படம் மாதிரி’’ - ரசிகர்கள் வரவேற்பில் நெகிழ்ந்த த்ரிஷா!

தமிழ் சினிமாவில் அழகிய காதலை சொல்லியிருக்கும் படங்கள் சொற்பமே அப்படி அழகான காதலைச் சொன்ன `96 படத்தில் ஜானுவாக ரசிகர்களின் மனதை அள்ளிய த்ரிஷா... நம்மிடம் `96 அனுபவத்தைப் பற்றிப் பேசினார்.

த்ரிஷா - விஜய் சேதுபதி

``நாங்க நினைச்சதையும் தாண்டி பெரிய அளவுல ரசிகர்களிடம் சேர்ந்திருக்கு. ரொம்ப சந்தோஷமா இருக்கு. 'பேட்ட' ஷூட்டிங்குக்காக நான் வாரணாசில இருக்கேன். ஹோட்டல் ரூம் வந்தாதான் சோஷியல் மீடியாலாம் பார்க்க முடியும். இத்தனை வருஷ நடிப்பு பயணத்துல ஒரு 10 நாள் ஷூட்டிங்கிலேயே படத்துல எது நல்லா இருக்கு எது நல்லா இல்லனு நமக்கு ஓர் உள்ளுணர்வு சொல்லும். சில நேரம் அது தப்பாக்கூட இருக்கலாம். இந்தப் படத்துல நடிக்கும்போது முதல் நாள்லயிருந்து ரொம்ப பாசிட்டிவா அந்த உள்ளுணர்வு இருந்துச்சு. அதை எப்படிச் சொல்றதுனு தெரியல. அந்த ஷூட்டிங் ஸ்பாட் போனாலே ஒரு மேஜிக்கா இருக்கும். நான் த்ரிஷாவா போகல, சேது (விஜய் சேதுபதி) சேதுவா வரல. இயக்குநரோட சேர்ந்து நண்பர்கள் மாதிரி இந்தப் படம் பண்ணோம். நாங்க உணர்ந்த அதே விஷயத்தை இன்னைக்கு ரசிகர்கள் அனுபவிக்கிறாங்கனு பார்க்கும்போது ரொம்பவே சந்தோஷமா இருக்கு. ரசிகர்கள் பலரும் பாராட்டும்போது '96 என் முதல் படம் மாதிரி ஃபீல் ஆகுது" என நெகிழ்ந்தார்.