வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (09/10/2018)

கடைசி தொடர்பு:13:00 (09/10/2018)

சின்னத்திரையில் களமிறங்கிய வெள்ளித்திரை நட்சத்திரங்கள்!

காலத்துக்குத் தகுந்தாற்போல மக்களுக்கு புதிது புதிதாக எதோ ஒன்றைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்து, ஒவ்வொரு சேனலும் தங்களை அப்டேட் செய்துவருகிறது. வழக்கமாக நடக்கும் சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களைவிட சினிமா நட்சத்திரங்கள் கலந்துகொள்ளும் ரியாலிட்டி ஷோக்களுக்கு மவுசு அதிகம். அதுவும் அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி, அதை நடத்துவதே சினிமா நட்சத்திரங்கள்தான். அந்த வகையில் கோடீஸ்வரன் (சரத்குமார்), நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி (அரவிந்த்சாமி, பிரகாஷ்ராஜ், சூர்யா), தங்க வேட்டை (ரம்யா கிருஷ்ணன்), ஜாக்பாட் (குஷ்பூ, சிம்ரன்), பிக் பாஸ் (கமல்ஹாசன்) எனத் திரைப் பிரபலங்கள் தொகுத்து வழங்கிய ஷோக்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த வழியில், அடுத்தடுத்து மூன்று நட்சத்திரங்கள் வெவ்வேறு ரியாலிட்டி ஷோக்களைத் தொகுத்து வழங்கயிருக்கிறார்கள்.

விஷால்


சன் டிவியில் 'நாம் ஒருவர்' என்ற நிகழ்ச்சியை விஷால் தொகுத்து வழங்குகிறார். 26  எபிசோடுகள் கொண்ட இந்த ஷோவில், ஒவ்வொரு வாரமும் ஒரு குடும்பத்துக்கு உதவி செய்யும் விதமாக, ஒவ்வொரு நட்சத்திரங்களும் வெவ்வேறு டாஸ்க்குகளுடன் களமிறங்க இருக்கிறார்கள். 

பிரசன்னா


சன் லைஃப் தொலைக்காட்சியில், 'சொப்பன சுந்தரி' எனும் ஷோவை நடிகர் பிரசன்னா தொகுத்து வழங்குகிறார். மாடல்களைத் தேர்ந்தெடுப்பதற்கான இந்த ரியாலிட்டி ஷோவும் வாரம் ஒரு முறை ஒளிப்பரப்பாக இருக்கிறது.  

வரலட்சுமி சின்னத்திரை


ஜெயா டி.வி-யில் 'உன்னை அறிந்தால்' என்ற ஷோவை நடிகை வரலட்சுமி தொகுத்து வழங்குகிறார். சமூகத்தில் நடக்கும் விஷயங்களைப் பற்றி இரு தரப்பினரும் பேசும்  டாக் ஷோவாக வெளிவரவிருக்கிறது.  இவர்களைத் தொடர்ந்து, தமன்னா, ஹன்சிகா போன்ற முன்னணி நடிகைகளும் தமிழ்த் தொலைக்காட்சி உலகை அலங்கரிக்க உள்ளதாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. 
ஆக, சின்னத்திரை வி.ஜேக்களே அலர்ட்! 

நீங்க எப்படி பீல் பண்றீங்க