வெளியிடப்பட்ட நேரம்: 14:54 (09/10/2018)

கடைசி தொடர்பு:14:57 (09/10/2018)

``சண்டக்கோழி 2 ரிலீஸுக்குப் பிறகு `இடம் பொருள் ஏவல்’..! - இயக்குநர் சீனு ராமசாமி

என்னோட சினிமா வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்பட்டு எடுத்த திரைப்படம் `இடம் பொருள் ஏவல்'. இந்தப் படத்துக்காக நிறைய உழைச்சிருக்காங்க எல்லோரும்.'' என்று சொல்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி. விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் நடித்திருக்கும் இந்தப் படம் ரிலீஸூக்காகக் காத்திருக்கிறது. இதுகுறித்து அவரிடம் பேசியதிலிருந்து. 

 இயக்குநர் சீனு ராமசாமி

`இடம் பொருள் ஏவல்' படம் எடுத்து சில வருடங்கள் ஆக விட்டன. சில காரணங்களால் படத்தோட ரிலீஸ் தள்ளிப் போனது. படத்தின் தயாரிப்பாளர் இயக்குநர் லிங்குசாமியிடம் இதைப் பற்றிப் பேசினேன். `சண்டக்கோழி 2' ரிலீஸூக்குப் பிறகு இந்தப் படத்தின் ரிலீஸ் இருக்கும்னு நம்பிக்கை வார்த்தைகள் சொன்னார். இது எனக்குப் பெரிய சந்தோஷத்தைக் கொடுத்தது. இந்தப் படம் புவி சார்ந்த படம். நம்ம மண் வாசனையைப் பேசும். மதுரை, கொடைக்கானல் போன்ற லொகேஷன்களில் படம் எடுத்துள்ளோம். கிட்டத்தட்ட 30 நாள் கொடைக்கானலில் மட்டும் ஷூட்டிங் நடத்தினோம். செப்டம்பர் மாதம் ஷூட்டிங் நடந்ததால குளிர் எங்களை வாட்டி எடுக்கும். காலையிலே 5 மணிக்குக் கிளம்பினா ஸ்பாட்டுக்குப் போக 3 மணிநேரம் ஆகும். இடம், பொருள் தேடி அலையும் 3 மனிதர்களைப் பற்றிய கதைக்களம். மொத்தம், படத்துல 3 கதைகள் இருக்கு. படம் நல்லா வந்திருக்கு. பார்த்தவர்கள் எல்லோரும் படம் பார்த்துட்டு என்னை வாழ்த்துனாங்க. சீக்கிரம் ரிலீஸ் ஆகணும்ங்கிறதுதான் என்னோட ஆசை'' என்றார் சீனு ராமசாமி. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க