வெளியிடப்பட்ட நேரம்: 15:28 (09/10/2018)

கடைசி தொடர்பு:15:28 (09/10/2018)

`திருமணம்'... கலர்ஸ் தமிழின் ஸ்டார் சீரியல்!

`கலர்ஸ் தமிழ்’ தொலைக்காட்சியில் நேற்று ஆரம்பமான  `திருமணம்’ மெகா தொடருக்கு சமூக வலைதளங்களில் பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்துள்ளன. இதில் ஹைலைட் என்னவென்றால்,  `திருமணம்’ தொடர் குறித்துத் திரைப் பிரபலங்கள் பலரும் ட்வீட் செய்தனர். நேற்றிரவு சில மணிநேரம் தேசியளவிலான ட்விட்டர் ட்ரெண்ட்டிங்கில் ‘திருமணம்’ ஹேஷ் டாக் இடம்பெற்றிருந்தது. 

திருமணம்
 

திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு  `கலர்ஸ் தமிழ்’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இத்தொடரில் நாயகியாக ஸ்ரேயாவும் நாயகனாக சித்துவும் அறிமுகமாகிறார்கள். மங்களூரைச் சேர்ந்த ஸ்ரேயா விளம்பரப்படங்களில் நடித்தவர். சித்து டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர். பிதாமகன், ரஜினி முருகன், சீமராஜா உள்ளிட்ட முன்னணித் திரைப்படங்களின் ஒளிப்பதிவாளரான பாலசுப்ரமணியம் இத்தொடரில் ஒளிப்பதிவு மேற்பார்வை செய்கிறார். `யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ உள்ளிட்ட முன்னணி படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர்  `இயக்க மேற்பார்வை’ செய்கிறார். 

திருமணம்
 

தொடரின் கதைக்களம் என்ன..? 

நாயகி பெயர் ஜனனி. நாயகன் பெயர் சந்தோஷ். பெற்றோரின் நிர்பந்தத்தால் ஜனனி - சந்தோஷ் திருமணம் நடக்கிறது. அதில் இருவருக்குமே பெரிதாக விருப்பம் இல்லை. ஜனனி - சந்தோஷ் இடையே அன்பும், வெறுப்பும் கலந்த ஒரு உறவு நீள்கிறது. அந்த உறவில் காதலும் ரொமான்ஸும் துளிர்க்கிறதா என்பதுதான் கதை.

`திருமணம்' தொடர் உற்சாகத்துடன் பேசிய  சித்து, `இது உறவுகளைக் கொண்டாடும் தொடர். திருமணத்துக்குப் பின் தம்பதியின் உறவில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை அழகாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

ஸ்ரேயா பேசுகையில் `இந்தத் தொடர் கண்டிப்பாக அனைத்துத் தரப்பினருக்கும் பிடிக்கும். தம்பதியின் கோபம், காதல் போன்ற அனைத்து உணர்வுகளையும் இத்தொடர் சித்திரிக்கப்பட்டுள்ளது’ என்றார்.