வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (10/10/2018)

கடைசி தொடர்பு:08:16 (10/10/2018)

`என் கனவு நிறைவேறிவிட்டது!' - 'சர்கார்' படம் குறித்து வரலட்சுமி சரத்குமார் நெகிழ்ச்சி

'சர்கார்' படம் குறித்து வரலட்சுமி சரத்குமார் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், என் கனவு நிறைவேறிவிட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

வரலட்சுமி சரத்குமார்


சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் முருகதாஸ் - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம், 'சர்கார்'. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் நடிகை வரலட்சுமிசரத்குமார்,பழ.கருப்பையா, ராதாரவி, யோகிபாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா  சமீபத்தில் நடைபெற்றது. தீபாவளிக்கு படம் வெளியாக உள்ள நிலையில், படத்தில் நடித்தது குறித்து தனது அனுபவங்களை வரலட்சுமி சரத்குமார் பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியுள்ள வீடியோவில்,``ரொம்ப சந்தோஷமா இருக்கு! படத்தில் நல்ல கதாபாத்திரம் எனக்குக் கிடைத்துள்ளது. நடிகர் விஜய் எளிமையானவர். அவருடன் நடிப்பது மிகவும் ஈஸியாக  இருந்தது. இயக்குநர் முருகதாஸ் மிகவும் இனிமையானவர். அழகாக வேலைவாங்குவார். அமைதியான இயக்குநர். சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் விஜய் படத்தில், இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நடித்திருக்கிறேன். எனது நீண்ட நாள் கனவு இது. 'சர்கார்' படத்தை திரையில் பாருங்க”  என்று தெரிவித்துள்ளார்.