வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (10/10/2018)

கடைசி தொடர்பு:07:45 (10/10/2018)

ஹேப்பி பர்த்டே எம்சிஸ் தலைவன் வடிவேலு! - ட்ரெண்டாகும் ஹேஷ்டெக் #HBDMCsThalaivanVadivelu

காமெடி நடிகர் வடிவேலுவின் பிறந்தநாளையொட்டி, ட்விட்டரில் `ஹேப்பி பர்த்டே எம்சிஸ் தலைவன் வடிவேலு' என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. 

வடிவேலு


தமிழ் சினிமா ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படுபவர் வடிவேலு. சமூக வலைதளங்களில் வடிவேலுவைத் தவிர்த்து `மீம்'மை உருவாக்க முடியாது என்ற அளவில், மீம் கிரியேட்டர்களுடன் ஒன்றிப்போயுள்ளார். யாரைக் கலாய்ப்பதாக இருந்தாலும், வடிவேலு தேவைப்படுவார்.  நட்சத்திர நடிகர்களுடைய படத்தின் ஃபர்ஸ்லுக் போஸ்டர்கள் வெளியாகிய அடுத்த சில நிமிடங்களில், அது வடிவேலு வெர்சனாக இணையத்தில் வைரலாகும். ஃபோட்டோக்கள் மட்டுமின்றி, டிரெய்லர்களிலும் வடிவேல் வெர்ஷன் உருவாகி இணையத்தில் உலாவரும். சமீபகாலமாக அவரது படங்கள் வெளியாகாவிட்டாலும், டிரெண்ட் செட்டராகவே இருக்கக்கூடியவர்.

வடிவேலு

ஃபேஸ்புக்கில் பதிவுகளுக்கு கமென்ட் செய்ய வேண்டுமென்றாலும், படத்தின் விமர்சனத்தை வெளிப்படுத்தவேண்டுமென்றாலும், அரசியல்வாதிகளைக் கலாய்க்கவேண்டுமென்றாலும், உங்களுக்கு நிச்சயம் வடிவேலுவின் தேவை ஏற்படும். சமீபகாலத்தில் அவரைப் போல இணையத்தில் கொண்டாடப்படுபவர் யாரும் இல்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது. தமிழ்சினிமாவின் `சார்லி சாப்லின்' `பாவனைகளின் நாயகன்' என மீம் கிரியேட்டர்களால் அழைக்கப்படும் வடிவேலுவின் பிறந்தநாள் இன்று. அவரது பிறந்தநாளையொட்டி, சமூக வலைதளங்களில் `ஹேப்பி பர்த்டே எம்சிஸ் தலைவன் வடிவேலு' என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.