வெளியிடப்பட்ட நேரம்: 10:55 (10/10/2018)

கடைசி தொடர்பு:10:55 (10/10/2018)

``நானே முழுப் பொறுப்பு” நோட்டா விமர்சனத்துக்கு விஜய் தேவரகொண்டாவின் பதில்!

‘நோட்டா’ படத்தின் கலவையான விமர்சனத்துக்குப் பதிலளித்துள்ளார், அறிமுக நாயகன் விஜய் தேவரகொண்டா. 

விஜய் தேவரகொண்டா

‘ரவுடி’ என்று செல்லமாக அழைக்கப்படும் டோலிவுட் நடிகர் விஜய் தேவரகொண்டா, 'பெல்லி சூப்புலு', 'அர்ஜுன் ரெட்டி', 'கீதா கோவிந்தம்' உள்ளிட்ட தெலுங்குப் படங்கள்மூலம் தமிழிலும் ரசிகர்களைப் பெற்றவர். தமிழில் இவர் நாயகனாக அறிமுகமான ‘நோட்டா’ திரைப்படம் கடந்த அக்டோபர் 5 -ம் தேதி வெளியானது. ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில், ஞானவேல்ராஜா தயாரித்த இப்படத்தில்  சத்யராஜ், கருணாகரன், எம்.எஸ். பாஸ்கர் ஆகியோர் நடித்திருந்தனர். தெலுங்கு மற்றும் தமிழில் வெளியான இப்படத்துக்கு, இருமொழி ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏமாற்றம்  அளிக்கும் வகையில் இருந்தது.  இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அளித்துள்ள விளக்கத்தில்,        ‘நோட்டா’வை எனக்காகப் பார்த்த ரசிகர்களுக்கும், ஏற்றுக்கொண்டவர்களுக்கும் நன்றி. நோட்டாவுக்காக நான் பெருமைகொள்கிறேன். நான் சொல்ல நினைத்த கதையைப் படமாக அளித்தேன். நோட்டாவுக்காக நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். படத்தின் ஏமாற்றத்துக்கு நானே முழுப் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன். முன்வைக்கப்பட்ட அனைத்து விமர்சனங்களும் பரீசிலிக்கப்படும். நான் மீண்டும் வருவேன்“ என்று தனது ரசிகர்களுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளார். 
 

நோட்டா தொடர்பான டிவிட்டர் பதிவு

பெரிய நடிகர்களே படத்தின் தோல்வி பற்றி பேசத் தயங்கும் இடத்தில், ரசிகர்களிடம் தனது தோல்வியை நேரடியாகப் பேசியுள்ள விஜய்தேவரகொண்டாதான் ட்விட்டரில் இப்போது ட்ரெண்டிங்!