வெளியிடப்பட்ட நேரம்: 17:37 (10/10/2018)

கடைசி தொடர்பு:17:37 (10/10/2018)

சிம்பு - சுந்தர்.சி படத்தில் இணைந்த மஹத்..!

தெலுங்கில் பவன் கல்யாண் - த்ரிவிக்ரம் கூட்டணியில் 2013-ல் வெளியான 'அத்தாரின்டிக்கி தாரேதி' படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்பு ஹீரோவாக நடிக்க, அதை சுந்தர்.சி இயக்கி வருகிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ஜார்ஜியாவில் பாடல் காட்சியுடன் தொடங்கப்பட்ட ஷூட்டிங், தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது; இதில் கதாநாயகியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார்.

சிம்பு; சுந்தர் சி; மஹத்

`அத்தாரின்டிக்கி தாரேதி' படத்தில் பவன் கல்யாணுக்கு அத்தையாக நடித்த நதியா ரோலில், ரம்யா கிருஷ்ணன் நடித்து வருகிறார். படத்துக்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்போது இந்தப் படத்தில் மஹத் இணைந்திருக்கிறார். சிம்புவின் நீண்ட நாள் நண்பரான மஹத், சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குச் சென்று பிரபலமானார். மஹத் ஏற்கெனவே சிம்பு நடித்த ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தில் அவருடன் இணைந்து நடித்துள்ளார். இந்தப் படத்தில் மஹத் இரண்டாவது ஹீரோ என்றும், மஹத்துக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடிப்பதாகவும் தகவல் வருகின்றன.