வெளியிடப்பட்ட நேரம்: 18:14 (10/10/2018)

கடைசி தொடர்பு:18:14 (10/10/2018)

`உங்களுக்காகதான் இரவு முழுக்க இங்கேயே காத்திருக்கோம்!’ - அஜித்தை நெகிழவைத்த ரசிகர்கள்

நடிகர் அஜித் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தப் புகைப்படத்தின் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சிக் கதை இருப்பதாக அஜித் ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள். 

அஜித்
 

இயக்குநர் சிவா இயக்கத்தில் அஜித் `விஸ்வாசம்’ படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு பொங்கல் விடுமுறைக்குப் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் டப்பிங் பணிகளும் தொடங்கிவிட்டன. அண்மையில் சென்னையில் இருக்கும் ஒரு டப்பிங் திரையரங்கில் அஜித் டப்பிங் பணிகளில் ஈடுபட்டுள்ளார். டப்பிங் திரையரங்கில் அஜித் இருப்பது அவரின் ரசிகர்கள் சிலருக்கு எப்படியோ தெரிய வர, இரவு 8 மணிமுதல் அந்தத் திரையரங்கின் வாசலில் காத்திருக்கத் தொடங்கியுள்ளனர். மறுநாள் அதிகாலை 5 மணிக்குதான் டப்பிங் பணி நிறைவு பெற்றுள்ளது. டப்பிங் பணியை முடித்துகொண்டு அஜித் வெளியே வந்து தனது காரில் கிளம்பியுள்ளார். அந்தக் காருக்குப் பின்னால் காத்திருந்த ரசிகர்கள் ஓடியுள்ளனர். காரின் பின்னால் யாரோ ஒடி வருவதைக் கவனித்த அஜித் காரை நிறுத்தச் சொல்லி ரசிகர்களைச் சந்தித்துள்ளார்.

`உங்க கூட புகைப்படம் எடுக்கணும். அதற்காகதான் இரவு முழுவதும் இங்கு காத்திருக்கோம்’ என்றனர். அதற்கு அஜித் `டப்பிங் பேசி ரொம்ப சோர்வா இருக்கேன். தனித்தனியா புகைப்படம் வேண்டாம். எல்லோரும் சேர்ந்து ஒரே புகைப்படமாக எடுத்துக்குவோம்’ என்றார். ரசிகர்கள் உற்சாகமாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க