வெளியிடப்பட்ட நேரம்: 19:41 (10/10/2018)

கடைசி தொடர்பு:19:41 (10/10/2018)

`முதல் படத்துல நயன்தாரா, இப்ப டாப்ஸி' - அடுத்த படத்தை அறிவித்தார் `மாயா' இயக்குநர்!

நயன்தாராவை வைத்து மாயா படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் தனது அடுத்த படம் குறித்து அறிவித்துள்ளார். 

டாப்ஸி

நயன்தாராவை வைத்து `மாயா' என்கிற திரில்லர் படத்தை இயக்கியவர் அஸ்வின் சரவணன். முதல் படத்திலேயே பேசப்பட்ட அவர், தன் அடுத்த படமாக `இறவாக்காலம்' என்ற படத்தை இயக்கியுள்ளார். நீண்ட நாள்களாக இப்படம் தயாராகி வருகிறது. இந்த நிலையில், தன் அடுத்த படம் குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார். பர்ஸ்ட் லுக்குடன் வெளியாகியுள்ள இந்தப் படத்துக்கு `கேம் ஓவர்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. முதல் படத்தில் நயன்தாராவை இயக்கியவர், இந்தப் படத்தில் டாப்ஸியை இயக்கவுள்ளார். `இறுதிச் சுற்று', `விக்ரம் வேதா', `தமிழ் படம்-2' ஆகிய படங்களைத் தயாரித்த ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ரோன் எத்தன் படத்துக்கு இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு பைலிங்க்குவல் படமாக தயாராகவுள்ள இப்படத்தின் ஷூட்டிங் நாளை முதல் தொடங்கவுள்ளது.  

படம் குறித்து இயக்குநர் அஸ்வின் சரவணனிடம் பேசினோம். ``ஒரு வீட்டுக்குள் நடக்கும் திரில்லர் கதை இது. படத்தின் 70 சதவிகித காட்சிகளில் டாப்ஸி வீல் சேரில் வருகிற மாதிரி காட்சிகள் இருக்கும். தமிழ், தெலுங்கு பைலிங்க்குவல் படமாக தயாராகவுள்ளது. டாப்ஸி தற்போது இந்தியில் பிரபலமாக உள்ளதால் இந்தியில் எடுக்க பேசி வருகிறோம். நாளை இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்குது. என்னுடைய இரண்டாவது படமான `இறவாக்காலம்' குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்" எனத் தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க