வெளியிடப்பட்ட நேரம்: 11:08 (11/10/2018)

கடைசி தொடர்பு:11:08 (11/10/2018)

"அந்தமாதிரி ஆள்களோட படமே வேணாம்!" - `மொகுல்' படத்திலிருந்து விலகிய அமீர் கான் #Metoo

கடந்த சில நாள்களாக இந்தியத் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்திவரும் விஷயம், சமூக வலைதளங்களில் ஆங்காங்கே பகிரப்பட்டு வரும்  #Metoo ஹேஸ்டேக்குகள். பாலிவுட்டில் இயக்குநர் அனுராக் காஷ்யப் அங்கமாக இருந்த ஃபேன்டம் ஃபிலிம்ஸின் உறுப்பினர் நிர்வாகி விகாஷ் பாகல். அதன்பிறகு, அமீர் கான் தயாரிக்கவிருந்த 'மொகுல்' திரைப்படத்தின் இயக்குநர் சுபாஷ் கபூர் ஆகியோர் மீது பாலியல் சீண்டல்களுக்கான புகார்கள் வலுத்தன. நடிகர் அலோக்நாத், பாடகர் கைலாஷ்கேர் எனப் பல பிரபலங்களின் பெயர்களும் இந்த விவகாரத்தில் தலையெடுத்துவருகின்றன. 

ஆமிர்கான்

டி- சீரிஸ் ஆடியோ நிறுவனத்தின்  நிறுவனர் குல்ஷன் குமாரின் பயோஃபிக்கை எடுக்க, டி- சீரிஸுடன் இணைந்து அமீர் கான் தயாரிப்பதாக முடிவெடுத்தனர். மொகுல் எனப் பெயரிடப்பட்ட  இப்படத்தை சுபாஷ் கபுர் இயக்குவதாக இருந்தது.    

இதில், தங்களுடைய நிலைப்பாட்டை தெரிவித்துள்ள அமீர் கான் மற்றும் அவரின் மனைவி கிரன் ராவ், 'திரைப்படத் துறையை அனைவருக்கும் பாதுகாப்பான ஒரு வேலை இடமாய் மாற்றும் குறிக்கோளாகக் கொண்டுள்ளது எங்கள் நிறுவனம்.  பாலியல் குற்றங்களை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம். அடுத்து, நாங்கள் தயாரிக்கவிருந்த படத்தின் இயக்குநருடன் (சுபாஷ் கபூர்) பணிபுரிய விருப்பமில்லை. அவரது வழக்கு நீதிமன்றத்தில் இருந்தாலும், இத்தகைய ஆள்களுடன் பணிபுரிய வேண்டாம் என முடிவெடுத்து, அந்தப் படத்திலிருந்து வெளியேறுகிறோம். திரைப்படத்துறையைப் பாதுகாப்பான வேலையிடமாக மாற்ற நாங்கள் எந்த ஒரு நல்ல முடிவையும் எடுப்போம் " என்று தெரிவித்துள்ளார்.      

அமிர் கான் - சுபாஷ் கபுர்

 முன்னதாக, விகாஷ் பாகல் விவகாரத்தில் தார்மீக பொறுப்பேற்று மும்பை சினிமா அமைப்பான MAMI-யிலிருந்து இயக்குநர் அனுராக் காஷ்யப் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.