வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (12/10/2018)

கடைசி தொடர்பு:09:07 (12/10/2018)

`அவர்கள் யார் என்பதை ஒருநாள் சொல்வேன்' - கசப்பான அனுபவம் குறித்து 'அனேகன்' பட நாயகி!

இந்தியத் திரையுலகை மெள்ளத் தலைத்தூக்குகிறது சர்வதேச அளவில் பெரிய பரப்பரப்பை ஏற்படுத்திய #Metoo நகர்வு. பாலிவுட் இயக்குநர் விகாஸ் பாகல், சுபாஷ் கபுர், நடிகர்கள் அலோக்நாத், சேத்தன் பகத், நானா படேகர் ஆகியோர்மீது பாலியல் சீண்டல்கள் குறித்து முன் வைக்கப்பட்டன. இதனிடையே, தமிழில் 'அனேகன்' படம் மூலம் அறிமுகமான அமைரா தஸ்தூர், ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில், 'எனக்கும் பாலிவுட், தென்னிந்தியத் திரையுலகில் பாலியல் சீண்டல்களுக்கும், அதைத் தொடர்ந்து மன உளைச்சல்களுக்கும் ஆளாகியிருக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

அமைரா தஸ்தூர்

ஒரு சில நிகழ்வுகளை நினைவுகூர்ந்த அமைரா, "என்னுடன் நடித்த நடிகர், என்னைத் தவறான முறையில் இறுக்கினார். அதை உணர்ந்த நான் இயக்குநரிடம் புகார் செய்தபோது, அதை அவர் கண்டுகொள்ள வேண்டாம் எனத் தெரிவித்தார். வேண்டுமென்றே படக்காட்சியைத் தாமதமாகப் பதிவுசெய்தனர்."

"சில இடங்களில், அந்த நடிகரை  உதாசீனப்படுத்தியதைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் அந்த நடிகரிடம் என்னை மன்னிப்பும் கேட்கச் சொன்னார். "என்னிடம் தவறாக நடந்தவர்கள் யாரென்று நான் இப்போது கூற மாட்டேன். அவர்கள், இந்தத் துறையில் மிகவும் பலம் வாய்ந்தவர்கள். அவர்கள் எனக்கு என்ன செய்தார்கள் என்றும், யாரென்றும் அவர்களுக்கே தெரியும். ஒரு நாள், அவர்கள் யாரென்று பெயரை சொல்வேன்" என்றார்.