Published:Updated:

இயக்குனர் கவுதம்மேனனை கைது செய்ய தடை!

இயக்குனர் கவுதம்மேனனை கைது செய்ய தடை!
இயக்குனர் கவுதம்மேனனை கைது செய்ய தடை!
இயக்குனர் கவுதம்மேனனை கைது செய்ய தடை!

சென்னை : மோசடி புகாரில் இயக்குனர் கவுதம்மேனனை வரும் 26ஆம் தேதி வரை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதி்த்துள்ளது.

தமிழ் திரைப்பட இயக்குனர் கவுதம்மேனன் மீது ஆர்.எஸ்.இன்பொடெய்ன்மென்ட் பட நிறுவன உரிமையாளர் ஜெயராமன் கடந்த 3ஆம் தேதி சென்னை போலீஸ் கமிஷனரிடம் மோசடி புகார் அளித்தார்.

அந்த புகார் மனுவில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தை இந்தி மொழியில் ‘ஏக்திவானா தா’ என்ற பெயரில் ரீமேக் செய்ய பாக்ஸ் ஸ்டுடியோ நிறுவனமும் போட்டோன் கம்பெனியும் ஒப்பந்தம் செய்தன. போட்டோன் நிறுவன பங்குதாரராக இயக்குனர் கவுதம் வாசுதேவமேனன் உள்ளார். இந்தியில் இப்படத்தை ரூ.13.58 கோடியில் தயாரிக்கப்பட்டது. அப்படத்துக்கு ரூ.1.98 கோடி முதலீடு செய்து இருந்தேன்.

##~~##
ஆனால் இந்த படத்தின் மூலம் எந்த லாபத்தையும் எனக்கு தராமல் கவுதம் மேனனும் பாக்ஸ் ஸ்டுடியோ நிறுவனமும் என்னை ஏமாற்றி விட்டன என்று கூறியிருந்தார்.
இந்த புகாரை தொடர்ந்து எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று கருதிய இயக்குனர் கவுதம்மேனன், சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி சுப்பையா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இயக்குனர் கவுதம்மேனனை வரும் 26ஆம் தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்த நீதிபதி, போலீஸ் விசாரணைக்கு கவுதம்மேனன் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.