வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (12/10/2018)

கடைசி தொடர்பு:16:40 (12/10/2018)

`மதன் கார்க்கி ட்வீட்ல அதைக் கவனிச்சீங்களா!'- வைரமுத்து மகன் கபிலன் விளக்கம்

`Me Too' அடிப்படையில் கவிஞர் வைரமுத்து மீது பின்னணிப் பாடகி சின்மயி புகார் கூறிய விவகாரத்தின் தொடர்ச்சியாக, `வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கியே சின்மயிக்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளார்' என்கிற தகவல் இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சின்மயியின் அம்மா பத்மாசினியும் நம்மிடம் இதைக் குறிப்பிட்டிருந்தார்.

`மதன் கார்க்கியின் இந்த ட்வீட் உண்மையா' என அறிய முற்பட்டோம். மதன் கார்க்கி தரப்பிலிருந்து அது பழைய ட்வீட்' என நமக்கு உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.

வைரமுத்து 

வைரமுத்துவின் இளைய மகன் கபிலன் வைரமுத்துவிடம் இந்தப் பிரச்னை குறித்துப் பேசியபோது, இந்த விவகாரத்துல அப்பாவே ட்விட்டர்ல பதில் சொல்லிட்டார். `சின்மயிக்கு ஆதரவாக மதன் கார்க்கி பதிவிட்டார்'னு சொல்ற ட்வீட்டை நல்லா கவனிச்சுப் பாருங்க. அது 2012-ல் சின்மயிக்கு நிகழ்ந்த ஒரு பிரச்னையின்போது பதியப்பட்டது. மேற்கொண்டு இந்த விவகாரத்துல நான் எதுவும் பேச விரும்பலை, வேண்டாமே' என முடித்துக்கொண்டார்.