வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (12/10/2018)

கடைசி தொடர்பு:18:30 (12/10/2018)

காட்ஃபாதர் கதாபாத்திரம்; மீண்டும் மகேந்திரன் - ரஜினி காம்போ

காட்ஃபாதர் கதாபாத்திரம்; மீண்டும் மகேந்திரன் - ரஜினி காம்போ

ரஜினி

ரஜினிகாந்த் நடித்துவரும் 'பேட்ட' படத்தில் சிம்ரன், த்ரிஷா, சசிகுமார், பாபிசிம்ஹா, விஜய் சேதுபதி நவாசுதின் சித்திக் எனப் பலரும் நடித்து வருகின்றனர். `தெறி' படத்தில் தனது வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்திய இயக்குநர் மகேந்திரன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகச் செய்திகள் வெளிவந்தன.

மகேந்திரன்

தற்போது படத்தின் படப்பிடிப்பில் சேர்ந்துள்ளார் இயக்குநர் மகேந்திரன். 'பேட்ட' படத்தில் நவாசுதீன் சித்திக் வில்லனாக நடிக்கிறார். மகேந்திரன், நவாசுதீன் சித்திக்கின் காட்ஃபாதர் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 'பேட்ட' படத்தின் படப்பிடிப்பு தற்போது வாரணாசியில் நடந்து வருகிறது. தனது கடா மீசை கெட்டப்பில் இருக்கும் ரஜினியுடன் மகேந்திரன் "Behind the Screens" போட்டோஸ் வெளிவந்துள்ளது. இந்தப் போட்டோக்கள் 'முள்ளும் மலரும்', 'ஜானி', 'கை கொடுக்கும் கை' ஆகிய படங்களில் வேலை செய்த நினைவுகளை அசைபோட்டாற்போல இருவரும் மகிழ்ந்திருக்கும் தருணத்தை க்ளிக் செய்ததுபோல் அவ்வளவு உயிர்ப்புடன் இருக்கிறது.