வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (12/10/2018)

கடைசி தொடர்பு:20:20 (12/10/2018)

``அஜித் பற்றி புகழ்ந்தது சஞ்சயின் அக்கவுண்டே இல்லை - விஜய் தரப்பு தகவல் 

விஜயின் வாரிசுகள் சஞ்சய், திவ்யா சாஷா இருவருமே எந்த ஒரு சமூக வலைதளங்களிலும் இல்லை என விஜய் தரப்பு தெரிவித்துள்ளது.

சஞ்சய் விஜய்

``தல கெத்து", ``தலயின் பிரியாணியை ஒரு தடவைதான் சாப்பிட்டிருக்கேன்", ``விஜய் சேதுபதி, அஜித் தான் எனக்குப் பிடித்த நடிகர்கள்", " அஜித் அங்கிளை நிறைய முறை மீட் பண்ணியிருக்கேன்" எனத் அஜித் ரசிகர்களின் கேள்விகளுக்கு நேற்று முதல் விஜய்யின் மகன் சஞ்சய் பதிலளித்து வருவதாக அந்தப் பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவலாக புகைப்படங்களாகப் பரவி வருகின்றன.

 

சஞ்சய் | திவ்யா ஷாஷா

``விஜய் மகன் `தல' அஜித் மேல் பெரும் மரியாதை வைத்துள்ளார். இரண்டாம் தலைமுறையினரும் பெற்றோர்களின் (விஜய் - அஜித்) நட்பை கடைப்பிடிப்பது நல்ல விஷயம்" என சமூக வலைதளங்களில் அஜித் - விஜய் ரசிகர்கள் புகழ்ந்து வந்தார்கள். இது கேட்க இனிமையாக இருந்தாலும். ரசிகர்களிடம் இந்தக் கேள்வி-பதில் செஷன் நடத்திய அந்த இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட் விஜய்யின் மகன் சஞ்சையுடையது இல்லை எனத் தெரியவந்துள்ளது. மேலும், ``விஜயின் மகன் சஞ்சய், மகள் திவ்யா சாஷா இருவருமே எந்த ஒரு சமூக வலைதளங்களிலும் இல்லை. தயவுசெய்து விஜய் ரசிகர்கள் யாரும் இந்தப் போலிக் கணக்குகளுக்கு ஆதரவு தெரிவிக்கவேண்டாம்" என விஜய் தரப்பு தெரிவித்துள்ளது.