வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (12/10/2018)

கடைசி தொடர்பு:21:00 (12/10/2018)

ஜெயலலிதா பயோபிக்கைப் போல் என்.டி.ஆர் பயோபிக்குக்கும் போட்டி!

மறைந்த ஆந்திர முதல்வரும் நடிகருமான என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வருகிறது. அதில் என்.டி.ஆர் வேடத்தில் அவரின் மகன் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கிறார். அவருக்கு மனைவியாக வித்யா பாலன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கேரக்டரில் ராணா, அவரின் மனைவியாக மஞ்சிமா, சாவித்ரியாக நித்யா மேனன், ஶ்ரீதேவியாக ரகுல் ப்ரீத்சிங் எனப் பலர் நடிக்கின்றனர். அவரின் சினிமா வாழ்க்கையை 'கதாநாயகுடு', அரசியல் வாழ்க்கையை 'மகாநாயகுடு' என்று பெயரிட்டு இரண்டு பாகமாக வெளியிட இருக்கின்றனர். ஜனவரி மாதம் படம் திரைக்கு வரவிருக்கிறது. 

என்.டி.ஆர்


இந்த நிலையில், சர்ச்சைக்குப் பெயர்போன தெலுங்கு இயக்குநர் ராம்கோபால் வர்மா, என்.டி.ஆரின் வாழ்க்கையைப் படமாக இயக்கப்போவதாக தனது சமூக வலைதளப் பக்கங்களில் கூறியிருக்கிறார். திருமணத்துக்கு முன், திருமணத்துக்குப் பின் என இரண்டு பாகங்களாக உருவாகவிருக்கிறதாம். முதல் பாகத்துக்கு 'என்.டி.ஆர்' எனவும், அடுத்த பாகத்துக்கு 'லக்‌ஷ்மியின் என்.டி.ஆர்' எனவும் பெயரிட்டுள்ளார். இப்படங்களுக்கு வரும் அக்டோபர் 19-ம் தேதி பூஜை நடக்கவிருப்பதாகவும் அப்போது நடிகர்கள் பத்தின அறிவிப்பு வெளியாகுமென தெரிவித்துள்ளார். 

ராம் கோபால் வர்மா


கோலிவுட்டில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயோபிக்கை இயக்குநர் விஜய் இயக்கத்தில் தயாராகவுள்ளது என்ற செய்தி வந்ததையடுத்து, நித்யா மேனனை வைத்து 'தி அயர்ன் லேடி' என்ற ஜெயலலிதா பயோபிக்கை எடுப்பதற்கான வேலைகளை இயக்குநர் பிரியதர்ஷினி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க