வெளியிடப்பட்ட நேரம்: 15:55 (13/10/2018)

கடைசி தொடர்பு:16:09 (13/10/2018)

`உங்களுக்கு சனி தோஷம் இருக்கு!'- ஜோதிடர் அட்வைஸால் பரிகாரம் செய்த வில் ஸ்மித்!

இந்தியா வந்துள்ள ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித், சனி தோஷம் நீங்குவதற்காக ஹரித்துவாரில் ருத்ர அபிஷேகம் நடத்தியுள்ளார். 

வில் ஸ்மித்

பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித், ஆவணப்படம் ஒன்றில் நடிப்பதற்காக இந்தியா வந்துள்ளார். கடந்த வாரம் இந்தியா வந்தவர், டெல்லியில் தாஜ்மகாலை சுற்றிப்பார்ப்பது, மும்பையில் ஹாயாக ஆட்டோ ஓட்டுவது, பாலிவுட் நட்சத்திரங்கள் வீட்டுக்கு விசிட் அடிப்பது என ஊர் சுற்றிக்கொண்டிருக்கிறார். பாலிவுட் நட்சத்திரங்கள் ரன்வீர் சிங், கரண் ஜோஹர் உள்ளிட்டோரும் வில் ஸ்மித்துக்கு ராஜ மரியாதை கொடுத்து உபசரித்துவருகின்றனர். இதற்கிடையே, ஹரித்துவார் சென்ற அவர், அங்குள்ள ஜோதிடரை சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது, வில் ஸ்மித்துக்கு சனி தோஷம் இருப்பதாக ஜோதிடர் கூறியுள்ளார். பின்னர், ஜோதிடரின் ஆலோசனைப்படி அங்குள்ள சிவன் கோயிலுக்குச் சென்றவர், சனி தோஷம் நீங்குவதற்காக சிவனுக்கு ருத்ர அபிஷேகம் செய்துள்ளார். இதேபோல, ரிஷிகேஷ் சென்று கங்கா ஆரத்தியும் எடுத்து வழிபட்டுள்ளார். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன. 

இதற்கிடையே, வில் ஸ்மித்துக்கு தோஷம் இருப்பதாகக் கணித்த ஜோதிடர், அதைப் பற்றி பகிர்ந்துகொண்டார். அதில், ``அவரது ஜாதகத்தைப் படித்து முடித்தபின், அவருடைய வாழ்க்கையின் பல முக்கிய நிகழ்வுகள் பற்றி அவரிடம் சொன்னேன். அவர் மகன் குறித்தும் கூறினேன். இவை அனைத்தையும் அமைதியாகக் கேட்டார். ஜாதகத்தின் கணிப்புகளை துல்லியமாகக் கேட்ட அவர், ஜோதிடத்தின் தன்மையால் ஈர்க்கப்பட்டார். பின்னர், சனி தோஷம்குறித்து விளக்கினேன். அதற்கான நிவாரணம்குறித்து கேட்ட அவர், உடனடியாக பரிகாரம் செய்ய ஒப்புக்கொண்டார். அதன்பிறகே பூஜைகள் நடைபெற்றது. ருத்ர அபிஷேகத்தின் வீரியத்தை உணர்ந்துகொண்டு, மிகவும் கவனமாக ஒவ்வொரு பூஜையையும் செய்தார்" எனக் கூறியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க