வெளியிடப்பட்ட நேரம்: 08:37 (14/10/2018)

கடைசி தொடர்பு:08:37 (14/10/2018)

‘உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும்’ - தனுஸ்ரீ தத்தாவின் அடுத்த அதிரடி

தான் குற்றம்சாட்டிய நானாபடேகர் உள்பட அனைவர் மீதும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட வேண்டும் என தனுஸ்ரீ தத்தா போலீஸில் மனு அளித்துள்ளார். 

தனுஸ்ரீ

2008-ம் ஆண்டு, `ஹார்ன் ஓகே ப்ளீஸ்' ( Horn ok pleassss) என்ற இந்திப் படத்தில், `Nathni Utaro’ என்ற பாடலுக்கு நடனம் ஆட ஒப்பந்தம் செய்யப்பட்ட என்னிடம் நானாபடேகர் தவறான முறையில் நடந்துகொண்டார் என தனுஸ்ரீ தத்தா #MeToo மூலம் புகார் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு தனது வழக்கறிஞருடன் மும்பை, ஒஷிவாரா காவல்நிலையத்தில், நானா படேகர் உள்பட 5 பேர் மீது எழுத்துப் பூர்வ புகார் மனு கொடுத்தார் தனு. புகாரைத் தொடர்ந்து படேகர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டது. 

இந்நிலையில், இதன் தொடர்ச்சியாக தற்போது மீண்டும் தனு ஒரு மனுவை காவல் நிலையத்தில் அளித்துள்ளார். அதில் நானாபடேகர் உள்பட தான் குற்றம் சுமத்திய அனைவரும் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப் படவேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சோதனையின் மூலம் தவறு செய்தவர்கள், தங்களின் தவறை அவர்கள் வாய்வழியாகவே சொல்ல தெரிந்துகொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார். 

“குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஊடகங்களுக்கு முன் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிராகரிக்கின்றனர். அவர்கள் குற்றம்சாட்டியவருக்கு எதிரான அறிக்கையைப் பதிவு செய்யும் வாய்ப்பும் உள்ளது. எனவே, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தி நியாயமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்” என தனுஸ்ரீ தரப்பு வழக்கறிஞர் நிதின் தெரிவித்துள்ளார்.