வெளியிடப்பட்ட நேரம்: 20:11 (15/10/2018)

கடைசி தொடர்பு:20:11 (15/10/2018)

ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கத்தில் ஷாருக்கான்!

ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டி வரும் நவம்பர் மாதம் 28-ம் தேதி ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் தொடங்கவுள்ளது. ஒடிசாவில் ஹாக்கி உலகக்கோப்பை நடப்பதைப் பிரபலப்படுத்த ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு தீம் சாங் ஒன்றை வெளிட ஒடிசா அரசு முடிவு செய்தது.

ஏ.ஆர். ரஹ்மான்

இந்திப் பாடலாசிரியர் குல்சார் பாடல்வரிகளில் ரஹ்மான் இசையமைத்துள்ள இப்பாடலுக்கான மியூசிக் வீடியோவை ரஹ்மானே இயக்குவது கூடுதல் சிறப்பு. 'ஜெய் ஹிந்த் ஜெய் இந்தியா' எனத் தொடங்கும் அந்தப் பாடலில் ஷாருக் கான் நடிக்கிறார். இதற்கான ஷூட்டிங் ஒடிஷா மாநிலம் புவனேஷ்வரில் சமீபத்தில் நடந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கத்தில் முதன்முறையாக நடித்ததை மகிழ்வாகப் பகிர்ந்து வருகிறார் ஷாருக் கான்.

ஷாருக் கான்

படப்பதிவிலிருந்து புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். நவம்பர் 28-ம் தேதி தொடங்கி டிசம்பர் 16 வரை நடக்கும் இப்போட்டியின் தொடக்க விழா நவம்பர் 27-ம் தேதி புவனேஷ்வர் நகரிலுள்ள கலிங்கா மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்த நிகழ்வில் மேற்சொன்ன பாடலை ரஹ்மானும் ஷாருக் கானும் பெர்ஃபார்ம் செய்யவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.