Published:Updated:

சண்டக்கோழி 2 படத்தை வெளியிட மாட்டோம் - திரையரங்க உரிமையாளர்கள் அறிவிப்பு!

சண்டக்கோழி 2 படத்தை வெளியிட மாட்டோம் - திரையரங்க உரிமையாளர்கள் அறிவிப்பு!
சண்டக்கோழி 2 படத்தை வெளியிட மாட்டோம் - திரையரங்க உரிமையாளர்கள் அறிவிப்பு!

சண்டக்கோழி 2 படத்தை வெளியிட மாட்டோம் - திரையரங்க உரிமையாளர்கள் அறிவிப்பு!

பைரஸி விவகாரத்தில் எங்களையே திருடர்களாக சித்தரிப்பதா, லிங்குசாமியின் இயக்கத்தில், விஷால் நடித்து நாளை வெளியாகவுள்ள விஷாலின்  சண்டக்கோழி 2 படத்தை வெளியிட மாட்டோம் எனத் திருச்சி தஞ்சைத் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளதுதான் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

திருச்சி, தஞ்சைத் திரையரங்க உரிமையாளர்கள்  திருச்சியில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இறுதியாக அச்சங்கத்தின் தலைவர் மீனாட்சி சுந்தரம் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அப்போது மீனாட்சி சுந்தரம், “திருட்டு விசிடி  தயாரித்ததாகத் 10 திரையரங்குகள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலை கண்டித்து  நாளை வெளியாகவுள்ள சண்டக்கோழி 2 உள்பட விஷால் நடித்த எந்த புதிய படத்தையும்  வெளியிட மாட்டோம். நாங்களும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கமும் சேர்ந்துதான் இந்த முடிவை எடுத்துள்ளோம். மேலும் வழக்கு நிலுவையில் உள்ளது. இவர்களே தீர்ப்பு வழங்குவது என்பது தவறானது. திருட்டு விசிடி ஒழிப்பின் தீர்ப்பு வருவதற்கு முன்பே விஷால் எடுத்துள்ள இந்த நடவடிக்கை நடவடிக்கைக்கு நாங்கள் எதிர்கிறோம். இந்தச் சூழ்நிலையில் தன்னிச்சையாக விஷால் எடுத்துள்ள முடிவு ஏற்கத்தக்கதல்ல.

திருட்டு விசிடியை ஒழிக்க அவர்கள் எங்களுடன் சேர்ந்து வரவேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. அதை விடுத்து எங்களையே திருடர்களாக கூறுவது மிகவும் தவறானது. இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளோம். அந்தப் பத்து திரையரங்குகளுக்கும் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கும் வரை இந்த போராட்டம் தொடரும்,

திருச்சி மாவட்டத்தில் உள்ள 140 தியேட்டர்களில் 40 திரையரங்குகளில் விஷால் படம் திரையிடப்படுவதாக இருந்தது. தற்போது திரைப்படம் வெளியிடுவது ரத்து செய்யப்படுகிறது. திரையரங்குகள் மீதான வழக்குகளை வாபஸ் பெறும்வரையில் விஷால் திரைப்படத்தினை திரையிட மாட்டோம் என்று உறுதிப்பட தெரிவித்தனர். மேலும் தமிழகம் முழுவதும் 300 திரையரங்குகளில் விஷாலின் படம் வெளியிடப்படாது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு